செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஹனிமூனில் அசிங்கப்பட்ட ராதிகா.. முழு சுயரூபத்தை காட்டிய கோபி, மகா சங்கடமான தருணம்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமம் நடந்துவருகிறது. திருமணமான கையோடு கோபி ராதிகாவை ஹனிமூனுக்கு கொடைக்கானலுக்கு அழைத்து வருகிறார். அங்கே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும், பாக்கியலட்சுமி குடும்பமும் வந்திருக்கிறது.

எதார்த்தமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி எழில் தன்னுடைய அப்பா கோபி, ராதிகாவுடன் ஹனிமூன் வந்திருக்கிறார் என்ற விஷயத்தையும் தெரிந்து கொள்கிறார். இதை குடும்பத்தினர் தெரிந்துகொண்டால் தாங்க மாட்டார்கள் என்பதற்காக அதை மறைத்து விடுகிறார்.

Also Read : 50 வயதிலும் காதல் குறையாமல் இருக்கும் மன்மதன்.. மகா சங்கமத்தில் கஞ்சியாக போகும் கோபி

ஆனால் கண்ணன், கோபியை பார்த்துவிட உடனே கோபி இருக்கும் அறைக்கு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் இருப்பதை பார்த்ததும் கண்ணன் தன்னுடைய அண்ணனை அந்த ரூமுக்கு அழைத்து வருகிறார். அங்கு வந்த மூர்த்தி கோபியை படு கேவலமாக திட்டுகிறார்.

கட்டின பொண்டாட்டியை விட்டுவிட்டு இன்னொருத்தருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்குவது அசிங்கமா இல்லையா என்றும் ஹனிமூனுக்கு கோபியுடன் வந்த ராதிகாவையும் சேர்த்து வைத்து மூர்த்தி அசிங்க படுத்துகிறார்.

Also Read : 2வது மனைவியுடன் ஊர் சுற்றும் தகப்பன்.. பார்க்கமுடியாமல் பொங்கிய வாரிசு

அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் தன்னுடைய முழு சுய ரூபத்தையும் காட்டிய கோபி, ‘ராதிகா நான் தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டி’ என்று ராதிகா கழுத்திலிருந்த தாலியை எடுத்துக் காட்டினார். இதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகள் பாக்யாவை தன்னுடைய சொந்த அக்காவாக பார்ப்பதால் கோபியை அடித்துக் கொல்ல வேண்டும் என அவர்களது ரத்தம் கொதிக்கிறது.

இருப்பினும் எழில் மற்றும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் மூர்த்தியை சமாதனப்படுத்தி அழைத்து செல்கின்றனர். இப்படி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமத்தில் மகா சங்கடமான தருணம் அரங்கேறுகிறது.

Also Read : மகா சங்கமத்தில் குட்டையை குழப்பிய கண்ணன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி

Trending News