வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திருந்தாத விஜயா, அசிங்கப்பட்ட மீனா.. புருஷனுக்காக வக்காலத்து வாங்கி முத்துவை டேமேஜ் பண்ணும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா மற்றும் மனோஜ் செய்த தவறு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் எப்படி தப்பிப்பது என்று தெரியாத விஜயா ஒரு டிராமாவை போட்டு ரூமுக்குள் போய்விட்டார். எப்படியாவது விஜயாவை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் கதவை தட்டுகிறார்கள்.

ஆனால் அண்ணாமலை, விஜயா மீது இருக்கும் கோபத்தினால் எதுவும் பேசாமல் இருந்து விடுகிறார். பிறகு முத்து, அம்மா வெளியே வரவேண்டும் என்றால் பார்வதி அத்தை வீட்டுக்கு வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று பார்வதிக்கு போன் பண்ணி வர சொல்கிறார். பார்வதி வந்ததும் விஜயா இருக்கும் ரூம் கதவை தட்டுகிறார். பிறகு உள்ளே போன பார்வதி ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

ஓவராக ஆட்டம் போடும் விஜயா ரோகினி

அத்துடன் இருவரும் உள்ளே பேசிய நிலையில் பார்வதி, விஜயாவை கூட்டிட்டு வருகிறார். வந்ததும் விஜயா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் மீனா மற்றும் முத்துவை தான் திட்டுகிறார். பிறகு பார்வதி, அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் அண்ணாமலை என்னிடம் மன்னிப்பு கேட்க தேவையில்லை. மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் விஜயா ஆணவத்துடன் நிற்கிறார்.

பிறகு இந்த நகைக்காக தான இவ்வளவு தூரம் பிரச்சினை பண்ணின, இந்த உனக்கு தேவையான நகையை எடுத்துட்டு போ என்று கையில் போட்டிருந்த நகைகளை கழட்டி மீனாவின் முகத்தில் தூக்கி எறிந்து விடுகிறார். எவ்வளவு பட்டாலும் திருந்தாத விஜயா கடைசியில் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் மீனாவை அசிங்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டார்.

ஆனாலும் மீனா வழக்கம் போல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து ஆவேசமாக பேச ரோகிணி, விஜயா மற்றும் மனோஜ்க்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு முத்துவை திட்டுகிறார். என்ன ஆனாலும் இந்த வீட்டில் சூடு சொரணை இல்லாமல் முத்து மற்றும் மீனா வேலைக்காரர்கள் போல் இருப்பதால்தான் அனைவரும் மட்டம் தட்டி பேசுகிறார்கள்.

கொஞ்சவாவது இவர்களுடைய அருமை அந்த வீட்டிற்கு புரிய வேண்டும் என்றால் தள்ளி இருந்தால்தான் முடியும். அதற்கு தனி குடித்தனம் போக வேண்டும். ஆனால் இந்த முத்து, அப்பாவை விட்டுவிட்டு வெளியே போக மாட்டார்.

அப்படி என்றால் வீட்டிற்குள் ஒன்றாக இருக்கும் பொழுது சுய கௌரவத்துடன் இருந்து மீனாவையும் அதற்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும். இல்லை என்றால் கடைசிவரை அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டு வேலைக்காரர்கள் ஆகத்தான் இருக்க முடியும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் சுவாரசியமான சம்பவங்கள்

Trending News