திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எதிர்பார்க்காமல் வசூல் வேட்டையாடிய 5 படங்கள்.. விஸ்வரூப வளர்ச்சியில் மிமிக்கிரி மணிகண்டன்

Unexpected 5 Tamil Films Box Office Collection: தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் அசால்டாக 100 கோடியை வாரிக் குவிக்கிறது. ஆனால் எந்தவித அலப்பரையும் இல்லாமல் சைலன்டாக ரிலீசாகி எதிர்பாராத 5 படங்கள் வசூல் வேட்டையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

போர் தொழில்: அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்தது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்திற்கு கேரள மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடியையும், உலக அளவில் 50 கோடியையும் குவித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

Also Read: நாலு கோடி பட்ஜெட்.. குட் நைட் படம் 3 வாரத்தில் செய்த மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்

குட் நைட்: 4 கோடி பட்ஜெட்டில் கடந்த மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆன குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறட்டையை மையம்படுத்தி தயாரித்திருக்கும் இந்த படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பெற்றிருந்தது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை எப்படி மற்றவர்களை பாதிக்கும் என்பதை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள கதையையும் இந்தப் படத்தில் சொல்லினர்.

இந்த படம் ரிலீஸ் ஆன வெறும் 4 நாட்களில் இரண்டு கோடி வசூலை அசால்டாக தட்டி தூக்கி பலரையும் வாயடைக்க வைத்தது. மூன்று வார இறுதியில் குட் நைட் 10 கோடியை அள்ளியது. இதில் ஜெய் பீம் படத்தில் ராஜா கண்ணு என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் இன்னும் சில படங்களில் நடித்திருந்தாலும் குட் நைட் படத்தின் மூலம்தான் இவரது முழுமையான திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் படத்திற்கு பிறகு அவர் பல மேடை நிகழ்ச்சிகளில் செய்யும் மிமிக்ரி பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இவர் சினிமாவில் இருக்கும் முன்னணி பிரபலங்களைப் போல் அப்படியே மிமிக்ரி செய்கிறார். அவற்றை கண்ணை மூடி கேட்கும் போது நிஜமாகவே அந்த நபர் பேசுவது போலவே இருக்கும். அது மட்டுமல்ல இயக்குனர், திரைக்கதை எழுதுபவர் என ஏகப்பட்ட திறமையை கொண்ட மிமிக்ரி மணிகண்டனுக்கு தற்போது அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் குவிவதால் விஸ்வரூப வளர்ச்சியில் இருக்கிறார்.

Also Read: கொல நடுங்க வைத்த அஸ்வின்ஸ்.. 15 நாட்களில் அள்ளிய மொத்த வசூல் ரிப்போர்ட்

அஸ்வின்ஸ்: பக்கா திரில்லர் கதைக்களத்தைக் கொண்ட அஸ்வின்ஸ் திரைப்படம் எதிர்பாராத நேரத்தில் வெளியாகி வசூலை தட்டி தூக்கி விட்டது. தருண் தேஜா இயக்கிய இந்த படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அஸ்வின்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 15 நாட்களிலேயே 4 கோடி வசூலை குவித்தது. வெறும் மூன்று கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் தொடர்ந்து தற்போதும் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இதனால் அஸ்வின்ஸ் படக்குழுவும் செம குஷியில் உள்ளனர்.

சத்திய சோதனை: பிரேம்ஜி-யின் வழக்கமான காமெடி கலந்த கலாட்டா நடிப்பில் வெளியான சத்திய சோதனை திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியை போலீசுக்கு போன் செய்து தெரிவிக்க நினைத்த பிரேம்ஜியே அந்த கொலை வழக்கில் சிக்கி, எப்படி மீண்டு வருகிறார் என்பதை இந்த படம் கலகலப்பாக கூறியுள்ளது. இந்த படத்தை’ஒரு கிடாரியின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சக்கையா இயக்கி உள்ளார். மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த ஜூலை 21ம் தேதி வெளியாகி ஐந்து நாட்களில் 0.40 கோடியை வசூல் செய்துள்ளது. பிரேம்ஜியின் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை யாரும் சற்று குறை எதிர்பார்க்கவில்லை.

Also Read: Asvins Movie Review- கொல நடுங்க வைத்த திரில்லர் படம்.. அமானுஷ்யம், அஸ்வின்ஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

தீராக் காதல்: கல்லூரியில் காதலிப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பிரிந்து, மறுபடியும் சந்திக்கும்போது காதலன் திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கிறார். ஆனால்காதலி மட்டும் கொடுமைக்கார கணவரிடம் மாட்டிக்கொண்டார். இதை காதலன் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. எத்தனையோ முக்கோண காதலைப் பார்த்த தமிழ் சினிமாவிற்கு இந்த படத்தில் சற்றும் எல்லை கடந்து விடக் கூடாது என கண்ணியத்தையும் மீறாத திரைப்படமாக இருந்தால் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படம் கடந்த மே 26 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் 0.50 கோடியை வசூலித்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு வார இறுதியில் இரண்டு கோடி வசூல் தீராக் காதலுக்கு கிடைத்தது.

Trending News