வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அண்ணன், தம்பி பாசத்தை அடிச்சுக்க ஆளே இல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பமாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பலரின் சதியால் குடும்பம் சுக்குநூறாக பிரிந்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்த நிலையில் ஜீவா மட்டும் தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கிரகப்பிரவேசம் நடத்துகின்றனர். இதில் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ஜீவா இந்த வீட்டை விட்டு பிரிய காரணமாக இருந்தது மீனாவின் தங்கை திருமணம் தான். அந்த விழாவில் எல்லோரும் தனித்தனியாக மொய் எழுதிய நிலையில் தன்னைப் பிரித்துப் பார்த்ததாக ஜீவா கருதினார்.

Also Read : பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

இதனால் தனது அண்ணனிடம் சண்டை போட்டுவிட்டு மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு இவர்களுக்குள் நல்ல உறவு இருந்தாலும் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் மொத்த குடும்பமும் கிரகப்பிரவேசத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். அப்போது மீனாவின் தங்கை கணவருக்கும் ஜீவாவுக்கும் பிணக்கு ஏற்படுகிறது.

இந்த சண்டை பூதாகரமாக வெடிக்க மீனாவின் அப்பா ஜீவாவை கண்டபடி திட்டுகிறார். சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாதவர் தான் உன் புருஷன் என மீனா முன்னிலையில் ஜீவாவை அசிங்கப்படுத்துகிறார். இதனால் பொங்கி எழுந்த மூர்த்தி என் தம்பிய பத்தி எதுவும் பேசக்கூடாது என ஜனார்த்தனனை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.

Also Read : விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

இதைப் பார்த்து ஜீவா கண்கலங்கி அண்ணனை கட்டி தழுவி கொள்கிறார். ஒரு விழாவில் பிரிந்த குடும்பம் தற்போது மற்றொரு விழாவில் இணைந்து விட்டார்கள். இதன் மூலம் அண்ணன், தம்பி பாசத்தை அடிச்சுக்கவே ஆளில்லை என்பதை மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இந்த நிகழ்வின் மூலம் பறைசாற்றி இருக்கிறது. இதன் மூலம் புதுவீட்டில் ஒரே குடும்பமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வாழ இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் ஜனார்த்தனனின் சின்ன மருமகனால் மிகப்பெரிய நஷ்டம் அவருக்கு ஏற்பட இருக்கிறது. அதன் பிறகு ஜீவாவின் அருமையை புரிந்து கொண்டு அவரே திரும்பி வர இருக்கிறார். இவ்வாறு இன்னும் இரண்டு வாரங்களில் சுவாரஸ்யமான கதைகளத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் செல்ல இருக்கிறது.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Trending News