பாலுமகேந்திரா, மணிரத்னத்திற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் துணையாய் நின்றவர் ஆபாவாணன். திரைப்பட கல்லூரியில், தான் பயின்ற வித்தை அனைத்தையும் கொண்டுவந்து படைத்த 5 படங்கள்.
ஊமை விழிகள்: ஒரு நடிகர் பட்டாளத்தையே வைத்து உருவாக்கப்பட்டது இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த ஒரு திரைப்படம். தமிழில் இதற்கு முன்னர் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று கூறலாம். படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள்.
செந்தூரப்பூவே: ராம்கி, விஜயகாந்த் கூட்டணியில் ஒரு மெகா ஹிட் படம் செந்தூரப்பூவே. அந்தகால இளசுகளின் தூக்கத்தை கலைத்த படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் பாட்டுக்கள், அனைத்தும் இன்றும் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்.
இணைந்த கைகள்: பின்னணி இசையில் மிரட்டி எடுத்த படம் இது. ஒரு படத்தின் இடைவேளை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை தமிழ் சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த படம் இணைந்த கைகள். இன்றுவரை ராம்கி, அருண் பாண்டியன் கூட்டணி என்றால், இந்தப் படம் தான் நம் நினைவிற்கு வரும்.
கருப்பு ரோஜா: சஸ்பென்ஸ், திரில்லர் மட்டுமில்லை, பேய் படங்களும் எனக்கு எடுக்கத் தெரியும் என்று இந்த படத்தை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளார் ஆபாவாணன். இந்தப்படமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க தவறவில்லை.
காவியத்தலைவன்: கமர்சியல் படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பைப் பார்த்து ஆபாவாணன்,1992இல் எடுத்த படம் காவியத்தலைவன். பானுப்பிரியா, இரட்டை வேடத்தில் இந்தப் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.