வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

தூங்காம நா காணும் சொப்பனமே!. பெண்களே கொண்டாடிய சில்க் நடித்த 5 கேரக்டர்கள்

Silk Smitha: சில்க் ஸ்மிதா, தமிழ் சினிமா இருக்கும் வரை இந்த பெயர் நிலைத்து கொண்டு இருக்கும். 1996 ஆம் ஆண்டு இதே நாளில் சில்க் ஸ்மிதா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். சில்க் என்றாலே கிளாமர் என்று இன்றுவரை நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

அதை தாண்டி சில்க் நன்றாக நடிக்க தெரிந்த ஒரு நடிகை அவருக்கு சாவித்திரி போல் ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை சில்க் ஸ்மிதாவை கிளாமர் ஆக்டர் ஆக மாற்றிவிட்டது.

சில்க் என்றாலே ஆண்கள் தான் தலை மீது வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதை தாண்டி, சிலுக்கு நடித்த இந்த ஐந்து கேரக்டர்கள் பெண்களால் அதிக அளவு வரவேற்பு பெற்றது. அந்த கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

பெண்களே கொண்டாடிய சில்க் நடித்த 5 கேரக்டர்கள்

அலைகள் ஓய்வதில்லை: சில்க் ஸ்மிதாவை ஒரு நல்ல நடிகையாக மக்களிடையே சேர்த்தது இயக்குனர் பாரதிராஜா தான். அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகை ராதாவின் அண்ணியாக, தியாகராஜனின் மனைவியாக எலிசி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

கணவன் தன் கண் முன்னே இன்னொரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்டு, வீடு வரும் போது அவனிடம் கண்ணீர் மல்க பேசும் காட்சியாக இருக்கட்டும், கணவனை மீறி ராதாவிடம் உன் காதலுக்காக போராடி என தைரியமாக சொல்லும் காட்சியாக இருக்கட்டும் சில்க் ஒரு நடிகையாக ஜெயித்திருந்தார்.

மூன்றாம் பிறை: தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு ஒரு சின்ன கேரக்டர் தான். பொன்மேனி உருகுதே பாடலுக்காக தான் அவரை அந்த படத்தில் நடிக்க வைத்தது.

வயதான ஆணை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணாக சில்க் அந்த கேரக்டரில் நடித்திருப்பார். பூரணம் விஸ்வநாதனின் மனைவியாக வரும் சில்க் ஸ்மிதா, கமலின் காதலுக்காக ஏங்கும் காட்சி, கணவனின் மீதான விரக்தி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கோழி கூவுது: பிரபு நடித்த கோழி கூவுது படத்தில் சிலுக்கு சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருப்பார். பிரபுவுக்கு தன்னுடைய அக்கா மகள் மீது அதீத காதல் இருக்கும். ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் தன்னை தவறாக பார்க்கும் பொழுது, தன்னிடம் கண்ணியமாக பழகும் பிரபுவை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டர் தான் சில்க் ஸ்மிதாவிற்கு.

பாட்டி சொல்லை தட்டாதே: பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா நடித்த பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் அனுசியா என்ற கேரக்டரில் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். குழந்தையை வாடகைக்கு கொடுக்கும் சில்க் அதே வீட்டில் வந்து வேலைக்காரி போல் தங்குவது கேரக்டர். மனோரமாவின் காமெடி காட்சிகளில் அவருக்கு இணை கொடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சில்க்.

அவசர போலீஸ் 100: அவசர போலீஸ் 100 படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக சில்க் ஸ்மிதா சின்ன பாப்பா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். கிளாமர் என்பதை தாண்டி தனது காமெடியும் வரும் என சில்க் நிரூபிக்க படம் தான் இது.

- Advertisement -spot_img

Trending News