சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இளையராஜா போல் அவருக்கும் நடந்த துரதிருஷ்டம்.. இவருக்கு வெற்றி, அவருக்கு படுதோல்வி

இசையமைப்பாளர்களில் இன்று முதலிடத்தில் இருக்கக் கூடியவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் இவர் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருகிறார். இன்றுவரை காதல் பாட்டு என்றால் அது இளையராஜா தான் என்பது இளைஞர்களின் துடிப்பு.

ஆரம்ப காலத்தில் இளையராஜா வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மூலம் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல் படத்தில், பாலாஜி கல்யாண மண்டபத்தில் இசை அமைக்கும்போது கரண்ட் கட்டாகி அபசகுனமாக அந்த நேரம் அமைந்தது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத இளையராஜா மனம் தளராமல் மெட்டுக்களை போட்டு அசத்தியுள்ளார். இந்த தடையை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இடைவிடாது தன் திறமையால் இன்று இசை சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார்.

இளையராஜாவை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இந்த மாதிரி ஒரு அபசகுனமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும்போது, ஆஸ்கர் பிலிம்ஸ் இடமிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது

அந்த நிறுவனத்தை தேடிச்சென்று ஸ்ரீகாந்த் தனது போட்டோக்களை கொடுக்கும் போது இளையராஜாவிற்கு நடந்தது போன்று ஸ்ரீகாந்திற்கும் கரண்ட் கட் ஆகி உள்ளது. இது ஸ்ரீகாந்த் மனதில் பெரிய இடியாய் விழுந்துள்ளது. என்னடா இது முதல் முதலாக போட்டோ கொடுக்கிறோம், அதை பார்க்க கூட முடியாமல் கரண்ட் கட் ஆயிற்றே என்று வருத்தத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

அடுத்த இரண்டொரு நாளில் அவர் ரோஜாக்கூட்டம் படத்தில் நடிக்க ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது. அதை கேட்டவுடன் தனக்கு வந்த ஆனந்தத்தை அளவிட முடியவில்லை என்று ஸ்ரீகாந்த சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Trending News