திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

Upcoming Ajith movies list: தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் வெற்றி கொண்டாட்டமும் இல்லாமல் சர்ச்சைகளிலும் சிக்காத அஜித் அவர்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சியில் பிசியாக உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் கதையை மகிழ் திருமேனி மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.

மேலும் படத்தை வெற்றி பெற செய்வதன் பொருட்டு எந்த ஒரு சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று அஜித் படப்பிடிப்பு குழுவினருக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார். துணிவு படத்திற்குப் பின் ஏற்பட்ட தனது இந்த நீண்ட இடைவெளியை ஈடு செய்யும் விதமாக 2024 இல் விடாமுயற்சியை தொடர்ந்து சில இயக்குனர்களை அழைத்து  அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்தடுத்து அஜித்தை வைத்து இயக்கும் இயக்குனர்களின் லிஸ்ட் இதோ,

ஆதிக் ரவிச்சந்திரன்: அஜித்தின் விடாமுயற்சி முடிவடைகின்ற நிலையில் உள்ளதால் தனது அடுத்த படமான ஏகே 63  வேலைகளை தொடங்கி விட்டார். மைதிலி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனது அடுத்த படமான ஏகே 63 யில் இணைய போவதாக அஜித் அறிவித்துள்ளார். ஏகே 63 படத்திற்காக தொடர்ந்து 70 நாள் கால்ஷீட் கொடுத்து விரைவில் படம் துவங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Also Read: லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

விக்னேஷ் சிவன்: அஜித்துடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்பது விக்னேஷ் சிவனின் நீண்ட கால கனவு. அதை நனவாக்கும் வகையில் அஜித் விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டு உள்ளார் விக்னேஷ்சிவனின் ஒன் லைன் ஸ்டோரி  பிடித்து உள்ளதால் ஏகே 63 அடுத்து விக்னேஷ் சிவனின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா: அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சிவா தற்போது கங்குவவை அடுத்து அஜித்துடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர விருப்பம் தெரிவித்து உள்ளார்.இவரும் அஜித் லிஸ்டில் மோஸ்ட் வான்டட்  இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்

கோபிசந்த் மலினேனி: தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் அஜித் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால்  தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி அஜித்தை நாடி கதை சொல்லி வருகிறார். இவர் கதைக்கும் அஜித் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் அஜித்திற்காக டார்க் ஹியூமர் ஸ்டோரி ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும் அது அவருக்கு கண்டிப்பாக பிடிக்கும் எனவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கார்த்திக் சுப்புராஜ் உடனான கூட்டணியில் அஜித்  வித்தியாசமான தோற்றத்தில் தரமான திரில்லர் நகைச்சுவை படம்  கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Also Read: 3 பேருக்கு அஜித் செய்த கைமாறு.. அதயும் ட்ரெண்டாக்கி கல்லாக்கட்டும் ஜெயிலர், லியோ படக்குழு

Trending News