Madraskaaran Trailer: விடாமுயற்சி பொங்கல் ரேஸிலிருந்து விலகினாலும் விலகினார்கள். இப்போது பல படங்கள் பொங்கல் போட்டியில் களமிறங்கி இருக்கிறது.
அதில் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது மெட்ராஸ்காரன் படம். மலையாள இளம் நடிகர் ஷேன் நிகாம் இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் நிஹாரிகா, கலையரசன், பாண்டியராஜன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இதன் ஆரம்பத்திலேயே ஹீரோ ஒரு பிரச்சனையில் சிக்குவது போல் காட்டப்படுகிறது. சென்னைக்காரராக இருக்கும் ஹீரோ கிராமத்து கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார்.
மெட்ராஸ்காரனாக களம் இறங்கும் ஷேன் நிகாம்
அதனால் அவருக்கு உண்டான பிரச்சனைகள் என்ன? அதிலிருந்து எப்படி அவர் வெளிவருகிறார்? என்பதுதான் படத்தின் கதை. ட்ரைலரை பார்க்கும்போதே இதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆக்சனுக்கு குறைவில்லாமல் வன்முறை தெறிக்க படம் உருவாகி இருக்கிறது. அதிலும் பிஜிஎம், ஹீரோவின் தமிழ் உச்சரிப்பு அனைத்துமே சிறப்பாக உள்ளது.
ரகடாக வரும் கலையரசன் இதன் மூலம் கவனம் ஈர்க்கிறார். அதேபோல் அலைபாயுதே படத்தில் வரும் காதல் சடுகுடு பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் ஹீரோ ஹீரோயினின் ரொமான்ஸ் கலந்த டான்ஸ் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும். இப்படியாக பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கும் இப்படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.