சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

தேசிய விருது வாங்கியும் கமுக்கமாக இருந்த உறியடி விஜய்.. இந்த விஷயத்துல லோகேஷியை மிஞ்சிட்டாரு!

Uriyadi Actor Vijayakumar: தற்போதைய திரை உலகில் உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை எடுத்து லாபம் சம்பாதிக்கும் கேட்டகிரியில் பல இயக்குனர்கள் பயணித்து வருகிறார்கள். இதற்கு அப்பாற்பட்டு கருத்துள்ள படமாகவும், சாதி மற்றும் அரசியல் சம்பந்தமான கதைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த வகையை சேர்ந்தவர் தான் உறியடி இயக்குனர் விஜயகுமார்.

உறியடி படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் கதையானது இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கிய, தீண்டாமையை எதிர்க்கிற நான்கு மாணவர்களின் கதையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் இயக்கினார்.

இப்படி ஒரு நல்ல கதையை கொண்டு வந்த இவரால் தொடர்ந்து இயக்குனராக பயணிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தின் வசனகர்த்தவாக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இப்படத்தில் இருக்கும் பல வசனங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தது. முக்கியமாக வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா என்ற வசனம் பண திமிரில் ஆதிக்கம் செய்யும் பலருக்கும் சாட்டையடியாக இருந்தது.

Also read: Fight Club Movie Review- வட சென்னையின் மற்றொரு களம்.. ரத்த வாடை தெறிக்கும் ஃபைட் கிளப் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதனால் தான் என்னமோ சூரரைப் போற்று தேசிய விருது வாங்கும் அளவிற்கு வெற்றியடைந்தது. அப்படிப்பட்ட இவர் இந்த படத்திற்கு முக்கிய தூணாக இருந்த போதிலும் பலருக்கும் தெரியாத வகையில் கமுக்கமாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் தேசிய விருது வாங்கிய போது கூட ஏதோ பக்கத்து வீட்டு பையன் வேடிக்கை பார்ப்பது போல் தன்னடக்கமாக இருந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட இவரிடம் பத்திரிக்கையாளர் ஏன் நீங்கள் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, பெருசாக வெளியேவும் தெரியவில்லை என்று கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு ஏதாவது பிரமோஷனுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு என்னுடைய பங்கு இருந்தால் மட்டுமே அது சரியாகும். இல்லை என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் பெயர் இருந்தாலே அந்த படம் மக்களிடம் ரீச் ஆகிவிடும். அப்படி இருக்கும் பொழுது நான் வரத் தேவையில்லை.

அப்படியே வந்தாலும் அது எனக்கான ஒரு வழியை தேடுவதாக தான் இருக்கும். அதை நான் விரும்பவில்லை என்று மெச்சூர் ஆக பதில் அளித்து இருக்கிறார். இந்த விஷயத்தில் இவரின் நண்பர் லோகேஷியை மிஞ்சி விட்டார். இப்படி எந்தவித அலட்டலும் இல்லாமல் இருக்கும் உறியடி விஜய் தற்போது நடிகராக ஃபைட் கிளப் படத்தின் மூலம் மீண்டும் எண்டரி கொடுத்திருக்கிறார். அத்துடன் இவரை பார்ப்பதற்கு சிறந்த இயக்குனர் மற்றும் ஹீரோக்கான லுக்கும் இவரிடம் இருக்கிறது.

Also read: முதலாளியாக வெற்றி பெறுவாரா லோகேஷ்.? வெளிவந்த ஃபைட் கிளப் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

Trending News