திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உண்மை சம்பவத்தை கண் முன் நிறுத்திய IAS வரலட்சுமியின் V3.. முழு விமர்சனம்

சமீப காலமாக சமுதாயத்தில் நடக்கும் அட்டூழியங்களையும், அவலங்களையும் அம்பலப்படுத்தும் வகையில் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களின் உண்மை நிலையை பல இயக்குனர்களும் மக்களுக்கு திரைப்படம் வாயிலாக காட்டி வருகின்றனர். அப்படி ஒரு உண்மை கதையை மையப்படுத்தி வெளிவந்துள்ள திரைப்படம் தான் V3.

அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், பாவனா, எஸ்தர் அனில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு கிடையாது. அப்படி இருக்கும் போது ஒரு இளம் பெண் சில வக்கிரம் பிடித்த மனிதர்களுக்கு இரையாவது தான் இந்த படத்தின் கதை.

Also read: பாடி ஷேமிங், அதிரடியாக 18 கிலோ உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி.. தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

கதைப்படி ஆடுகளம் நரேனுக்கு பாவனா, எஸ்தர் அணில் ஆகிய இரு பெண்கள் இருக்கின்றனர். அதில் மூத்த பெண்ணான பாவனா ஒரு நாள் இரவு சிலரால் உடல் ரீதியாக பலவந்தப்படுத்தப்படுகிறார். அதற்கு காரணமான ஐந்து இளைஞர்கள் விடிவதற்கு முன்பே காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். அதனால் மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றப்படும் இந்த வழக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதில் இருக்கும் முடிச்சுகளை அவர் எப்படி கையாள்கிறார், உண்மையை எப்படி வெளியில் கொண்டு வருகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் மட்டுமல்லாமல் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களையும் இயக்குனர் இப்படத்தில் கூறியிருக்கிறார்.

Also read: தங்கச்சிக்காக காதல் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. வரலட்சுமி உடம்பை குறைத்ததில் இப்படி ஒரு சங்கதி இருக்கா!

கதைக்கேற்றவாறு நீதி, நேர்மைக்காக போராடும் வரலட்சுமி தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் எஸ்தர் அனில் இரண்டாம் பாதியில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதேபோன்று பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் பாவனாவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படி படத்தில் பாராட்டுவதற்கு சில விஷயங்கள் இருந்தாலும் டாக்குமென்டரி பிலிம் போன்று ரொம்பவும் மெதுவாக நகரும் இந்த கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. மேலும் படத்தின் ஆரம்பத்திலேயே சில காட்சிகள் யூகிக்கும்படியாக இருப்பதும் இதற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனாலும் அரசியல் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி இருக்கும் விதமும், அதற்கு அநியாயமாக பலியாகும் அப்பாவி மக்களை பற்றியும் இயக்குனர் காட்டி இருப்பது பாராட்ட வைத்துள்ளது. ஆக மொத்தம் கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் நிச்சயம் பேசப்பட்டிருக்கும்.

Also read: என்ன பொண்ணுடா! 15 கிலோ உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள்

Trending News