செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தெம்பில்லாத துணிவு.. தலை கால் புரியாமல் ஆடும் வாரிசுவின் ஆட்டநாயகன்

கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பொருளாதாரமும் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களுடைய படங்கள் இடைவெளி விட்டு ரிலீஸ் ஆனாலே கலெக்சனில் யார் ஜெயித்தார்கள் என்ற போட்டி ஆரம்பித்து விடும்.

ஆனால் இந்த வருடம் இவர்கள் இருவர்களுடைய படமும் சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. படத்தின் முதல் போஸ்டரில் இருந்து, ஆடியோ வரை ஒருவரை ஒருவர் மிஞ்ச இவர்களுடைய ரசிகர்கள் படாத பாடு பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பொழுது கலெக்சனில் முதலிடம் வாரிசா அல்லது துணிவா என்று கடும் போட்டி நிலவி வருகிறது.

Also Read: ஒரு வாரம் கழித்து வாரிசுக்கு ஆட்டம் காட்டிய துணிவு.. ஆட்டநாயகனாக முன்னேறிய அஜித்

ஒரு பக்கம் வாரிசு படக்குழு தாங்கள்தான் பொங்கல் வின்னர் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறது. மறுபக்கம் துணிவு பட குழு தாங்கள் தான் பொங்கல் வின்னர் என்று அவர்கள் பங்குக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை ஆதாரத்துடன் எதுவும் உறுதியாகவில்லை.

ஆனால் தற்போது வாரிசு படக்குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் விஜய்யின் வாரிசு திரைப்படம் 150 கோடி இதுவரை வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இன்று வரை துணிவு பட குழு 100 கோடியை தாண்டி விட்டதாக கூட எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கலெக்சனை பற்றி எதுவும் பேசாமல் ரொம்பவும் மௌனம் காத்து வருகிறது.

Also Read: துணிவு மஞ்சு வாரியருக்கு இவளோ பெரிய மகளா.? அதிகமாக ஷேராகும் 23 வயது புகைப்படம்

வாரிசு மற்றும் துணிவு படத்தை ஒப்பிடும்போது வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு ஒரு காட்சி அதிகம் மற்றும் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு திரையரங்குகளும் அதிகம். அப்படி இருக்கும்போது வாரிசு படமே 150 கோடி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகும் இதுவரையில் அஜித்தின் துணிவு படம் 100 கோடி தாண்டி விட்டதாக கூட அறிவிப்பு வராமல் இருப்பது ரொம்பவே ஆச்சரியமாக உள்ளது.

ஒரு பக்கம் படக்குழு, மறுபக்கம் சினிமா வல்லுனர்கள், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்ஸ், ரசிகர்களின் சுய விருப்ப பதிவு என்று அவரவர் இஷ்டத்திற்கு கலெக்சனை ஏற்றி சொல்ல இன்று வரை பொங்கல் வின்னர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரியாது. திரையரங்குகளும், தயாரிப்பாளர்களும் தாமாக முன்வந்து புள்ளிவிவரப்படி உண்மையை சொன்னால் தான் இந்த குழப்பங்கள் நீங்கும்.

Also Read: 5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரிப்போர்ட்.. ஆட்ட நாயகனாக நிரூபித்த அஜித்

Trending News