Vaazhai-Kottukkaali Collection: சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளிவந்தது. இதில் விக்ரம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தரமான ஒரு வெற்றியை ருசித்துள்ளார்.
அதேபோல் அருள்நிதிக்கும் வழக்கம் போல நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் நிலைமைதான் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது அதை அடுத்து கடந்த வாரம் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, சூரி நடித்த கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளியானது.
இதில் வாழை படத்தை பிரபலங்கள் அனைவரும் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதனால் நாளுக்கு நாள் படத்திற்கான கூட்டமும் அதிகரித்து வருகிறது. இப்படி ஆடியன்ஸை இந்த நான்கு படங்களும் தியேட்டருக்கு படையெடுத்து வர வைத்துள்ளது. இதன் வசூல் நிலவரம் பற்றி இங்கு காண்போம்.
வாழைக்கு டஃப் கொடுக்கும் தங்கலான்
இதில் தங்கலானை பொருத்தவரை தற்போதைய நிலவரப்படி மொத்த வசூல் 78 கோடிகளாக இருக்கிறது. ஆனால் இப்போதும் தியேட்டர்களில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை அடுத்து டிமான்டி காலனி 2 படம் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் அதிக ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது.
அதன்படி இதன் வசூல் 38.50 கோடிகளாக இருக்கிறது. இதை அடுத்து வாழை படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி முதல் நாள் 1.15 கோடிகளை வசூலித்த இப்படம் இரண்டாவது நாளில் 2.50 கொடிகளும் மூன்றாவது நாளில் 4 கோடிகளையும் வசூலித்துள்ளது.
அந்த வகையில் வாழை தற்போது வரை 8 கோடி வரை கலெக்ஷன் பார்த்துள்ளது.. ஆனால் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படம் தான் இந்த போட்டிகளுக்கு நடுவில் திக்கி திணறிக் கொண்டிருக்கிறது.
முதல் நாளில் 50 லட்சம் வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் மந்தமான வசூலை தான் பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படம் 2 கோடி வசூலை நெருங்குவதற்கே படாத பாடு பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.