வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

வாடிவாசலில் சூர்யாவுடன் இணையும் வடசென்னை பிரபலம்.. தரமான சம்பவத்திற்கு ரெடியான வெற்றிமாறன்

Vaadivasal Suriya Vetrimaran: இயக்குனர் வெற்றிமாறனின் பல நாள் கனவு திரைப்படம் என்று சொன்னால் அது சூர்யாவின் வாடிவாசல் படம் தான். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஒருபக்கம் காத்திருக்கும் நிலையில், தற்போது ஒரு வழியாக வாடிவாசலுக்கு விடிவுக் காலம் பிறந்துள்ளது. அந்தவகையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் சூரி ,விஜய் சேதுபதியை வைத்து விடுதலை பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அதே சமயத்தில் நடிகர் சூர்யாவும் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தை முடித்த கையோடு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read: பிரகாசமான நடிகரின் கேரியருக்கு 99% ஆப்பு வச்சாச்சு.. சூழ்ச்சியால் வெற்றிமாறன் கூட ட்ராப் செய்த பரிதாபம்

ஆனால் இப்படத்திற்கு முன்பாகவே இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசலில் நடித்து விடலாம் என சூர்யா பிளான் செய்து வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணையவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வடசென்னை பட பிரபலம் தேர்வாகியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த இப்படம் மெகா ஹிட்டான நிலையில் இப்படத்தின் பாகம் 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இப்படத்தில் எப்போது நடிப்போம் என்ற ஆர்வத்தில் நடிகர் தனுஷும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

அந்த வகையில் வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரின் நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் தனுஷின் அன்பு கதாபாத்திரத்தையே மறக்க வைக்கும் அளவுக்கு இவரது நடிப்பு அமைந்தது. இதனிடையே வடசென்னை படத்தில் அமீரின் ராஜன் கதாபாத்திரத்துடன் இணைந்து நடிக்க இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை தேர்வு செய்தார். ஆனால் அந்த சமயம் அவரால் நடிக்க முடியாமல் போனது.

இதனிடையே தற்போது வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அமீரை நடிக்க வைக்கலாம் என வெற்றிமாறன் முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இதற்கு அமீரும் இப்படத்தில் நடிப்பதாக சம்மதித்த நிலையில், வாடிவாசல் படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் தான் இவர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. அமீர் எப்படி வடசென்னை படத்தில் பிளாஷ்பேக் கதையில் வருவாரோ அதே போல் வாடிவாசல் படத்திலும் பிளாஷ்பேக் கதையில் வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: வெற்றிமாறன் 47 முறை பார்த்த கமலின் படம்.. இயக்குனராக காரணமாக இருந்த 3 படங்கள்

- Advertisement -spot_img

Trending News