ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வடக்குப்பட்டி ராமசாமி கல்லா கட்டினாரா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Vadakkupatti Ramasamy First Day Collection: சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ட்ரெய்லரிலேயே கவனத்தை ஈர்த்த இப்படத்தை சந்தானமும் பயங்கரமாக ப்ரமோஷன் செய்தார்.

அதனாலேயே நேற்று திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டமும் ஆரவாரமாக இருந்தது. அதன்படி காலை, மதிய நேர காட்சிகளை விட மாலை இரவு காட்சிகளுக்கு தான் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது.

மேலும் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அளவுக்கு காமெடி கலாட்டாவாக இருப்பதும் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் சந்தானம் நக்கல், நையாண்டி கலந்து நடித்திருப்பது வழக்கம் போல ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

Also read: Vadakkupatti Ramasamy Movie Review- மூடநம்பிக்கையை வைத்து விபூதி அடிக்கும் சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கு.? விமர்சனம்

இப்படி படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது மட்டுமல்லாமல் முதல் நாள் கலெக்ஷனும் பட குழுவுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாளிலேயே ஒரு கோடி வரை வசூலித்துள்ளது.

இது வார இறுதி நாளான இன்றும் நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் சந்தானத்திற்கு இந்த வருடத்தின் ஆரம்பம் அமர்க்களம் ஆக தான் இருக்கிறது.

Also read: அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

Trending News