வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வருமா? வராதா என இழுத்தடித்த வாடிவாசல்.. திடீர் அப்டேட் கொடுத்த பிரபலம், இனிமேல் சரவெடிதான்

சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கும், தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடைய படங்களுக்கும் எப்போது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், இதற்கு அப்படகுழுவினருக்கும் நிறைய மெனக்கெடல்களும், தேடல்களும், நிறைய நேரமும் தேவைப்படும்.

அப்படி இருந்தால்தான் தரமான படைப்புகளை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவர முடியும். அந்த வகையில், வெற்றிமாறன் – சூரி கூட்டணியை மொத்த சினிமாத்துறையும் எதிர்பார்த்தது. இருவரும் இணைந்த அப்படத்திற்கு வாடிவாசல் என்று பெயரிடப்பட்டது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, கலைப்புலி தாணு பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படம் பற்றி தயாரிப்பாளார் தாணு, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி தெரிவித்திருந்தார். அதன்படி, சூர்யா 40 என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் ஷுட்டிங் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் நடந்தது. அதன்பின் சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது.

ஒருபுறம் சூர்யாவும் சூரரைப் போற்று இந்தி ரீமேக், கங்குவா ஆகிய படங்களில் பிஸியானார். அதேபோல் வெற்றிமாறனும் சூரியின் விடுதலை 2 படத்தில் பிஸியானார். இந்த நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறுதழுவலை அடிப்படையாக கொண்டு வாடிவாசல் தயாராவதாகவும் சூர்யா மாடு பிடிக்கும் வீரராக நடிப்பார் என கூறப்பட்டது.

ஜி.வி.பிரகாஷின் சூப்பர் அப்டேட்

இப்படத்தில் அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில்,ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது அடுத்த படம் கண்டிப்பா வாடிவாசல்தான். இப்படத்தோட ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கப் போகுது. இதுக்கான வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து வாடிவாசல் அப்டேட் கேட்டு வந்த சூர்யா ரசிகர்கள் ஜிவி.பிரகாஷின் அப்டேட்டை பார்த்து கப்சிப் ஆகி, இப்போதே இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை இணையதளத்தில் ட்ரெண்ட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில் முக்கிய படமாகவும், தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News