வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வளைந்து கொடுக்காத வடிவேலு.. தந்திரமாய் திட்டம் போட்டு இறக்கும் நங்கூரம்

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருப்பதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அப்போது வடிவேலு உதயநிதியை தனியாக சந்தித்து இந்த படம் தொடர்பாக பேசியுள்ளார்.

உங்களுக்கு நான் எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் கால்ஷீட் தருகிறேன். எப்போது வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் என்று அவர் உதயநிதியிடம் கூறியுள்ளார். வடிவேலு எப்போதும் சினிமாவில் இந்த அளவுக்கு யாரிடமும் வளைந்து கொடுப்பதில்லை.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு கூட இந்த அளவுக்கு இறங்கி போகவில்லை. மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் கூட அவர் பல பிரச்சனைகளை செய்து அதன் மூலம் சினிமாவில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.

இதனால் அவருக்கு பல சினிமா பட வாய்ப்புகள் பறிபோனது. ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் படவில்லை. ஆனால் அவர் தற்போது உதயநிதியிடம் இந்த அளவுக்கு பணிகிறார் என்றால் நிச்சயம் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அது என்னவென்றால் உதயநிதியின் அந்தஸ்து தான். அவர் ஒரு நடிகர், பட தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் முதலமைச்சரின் வாரிசு. அத்துடன் அவர் எம் எல் ஏ வாகவும் இருக்கிறார். அவர் தயவு இருந்தால் சினி ஃபீல்டில் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

மேலும் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் வடிவேலு தற்போது இருக்கிறார். அதனால் தான் அவர் தந்திரமாக திட்டம் போட்டு உதயநிதியிடம் இவ்வளவு இணக்கமாக பேசியுள்ளார்.

Trending News