வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

சினிமாவில் காமெடியன் நிஜ வாழ்க்கையில் வில்லனான வடிவேலு.. எவன் செத்தால் எனக்கென்ன.!

தமிழ் சினிமாவின் பல வருடங்களாக வைகைப்புயல் வடிவேலு ரசிகர்களை தன் நகைச்சுவையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இவர் நடித்தால் படம் வெற்றி அடையும் அந்த அளவிற்கு கதாநாயகனை விட இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். தனது பேச்சு, உடல் அசைவுகள், போன்றவற்றில் நகைச்சுவையை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார். ஆனால் நமக்குதான் காமெடி நடிகர் ஆனால் கூட நடிக்கும் நடிகர்களுக்கு மோசமானவராக இருந்துள்ளார்.

வடிவேலு கடந்த 10 வருடங்களுக்கு மேல் படங்கள் இல்லாமல் இருந்து வருகிறார் தற்போது ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் படங்கள் வெற்றி அடையவில்லை மற்றும் அவரது நகைச்சுவை எடுபடவில்லை. அவரை ஒதுக்குவதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் கூறப்படுகின்றன ஆனால் காரணம் அவரது சுபாவம் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைத்தும் மோசமானதாக கூறப்படுகிறது.

Als0 Read :  ஒரே பட தோல்வியால் சரியும் வடிவேலுவின் கொஞ்சமா இருந்த மார்க்கெட்.. சாபத்தை பழிக்க வைத்த விஜய் சேதுபதி

வடிவேலு கூட நடிக்கும் நடிகர்கள் முன்னேறி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பாராம். அவர்கள் சொந்தமாக வீடு வாங்கினாலோ அல்லது கார் வாங்கினாலும் அவர்களை தன் குரூப்பில் இருந்து தூக்கி விடுவாராம்.
அதேபோல் சம்பள விஷயமும் இவர் முடிவு செய்ய வேண்டுமாம் முகத்தை பார்த்து 500, 1000 என இவரே சம்பளம் கொடுப்பாராம் மீறி கேள்வி கேட்டால் வாய்ப்புகள் கொடுக்க மறுத்து விடுவாராம்.

இவர் வேண்டாம் என்று வேறு கம்பெனிகளுக்கு நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றாள் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவாராம். சின்ன காமெடி நடிகர்கள் காலையில் நேராக இவர் வீட்டுக்கு வரவேண்டும் இவர் பார்த்து யாரையாவது கூப்பிட்டு நடிக்க கூப்பிடுவாரு மற்றவர்கள் வீட்டுக்குப் போக வேண்டுமாம். இன்று வரை வடிவேலு கூட நடித்த காமெடி நடிகர்கள் யாரும் முன்னேறியதாக ஒரு ஆள் கூட இல்லை இன்று வரை அனைவரும் வறுமையில் இருந்து வருகிறார்கள்.

Als0 Read : நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய நடிகர்.. பொறாமையால் மொத்த படத்தையும் குழப்பி விட்ட வடிவேலு

போண்டாமணி சிறுநீரகம் செயலிழந்து தனக்கு உதவி செய்யுமாறு அவர் வீடியோவில் கூறி ஒரு சில நடிகர்கள் உதவி செய்தார்கள். ஆனால் கடைசிவரை வடிவேலு 5000 கூட பணம் இன்று வரை கொடுக்கவில்லை. காரணம் போண்டா மணி விவேக் கூடவும் நடிப்பார் அதனால் அவரை பிடிக்காததால் அவர் எப்படி போனாலும் கவலை இல்லை என்று தூக்கி எறிந்துவிட்டார்.

படத்தை தவிர நிஜ வாழ்க்கையில் இன்று வரை வடிவேலுவை ஒரு ஆள் கூட புகழ்ந்தது கிடையாது அவருடன் நடித்தவர்கள் அவரை திட்டித் தீர்த்து தூக்கி எறிந்தவர்கள் தான் அதிகம். அது இன்றுவரை தொடர்ந்து வருகிறது இதை பார்க்கும் பொழுது வடிவேலு இவ்வளவு மோசமான ஒரு ஆளாக இருந்து வருகிறார். அதனால் தான் அவர் இன்று படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் நடித்த படங்களும் வெற்றி அடையாமல் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.இது மட்டும் நடிகைகளின் சாபமாக பார்க்கப்படுகிறது.

Als0 Read : ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்

- Advertisement -spot_img

Trending News