புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வளரும் முன்பே அட்டூழியம் பண்ணும் நடிகர்.. வாலை ஓட்ட நறுக்கி விட்ட வடிவேலு!

தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக இருப்பவர் வடிவேலு. ஆனால் வடிவேலுக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட மோதலால் வடிவேலு படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது. அதனால் வடிவேலு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

சமீபத்தில் இந்த பஞ்சாயத்தை சுமூகமாக முடிக்கப்பட்டு வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பல காமெடி நடிகர்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகளில் ரெடின் கிங்ஸ்லி வடிவேலுடன் இணைந்து நடிக்கும்படி கதைக்களம் அமைந்துள்ளது. அதனால் படத்தின் இயக்குனர் ரெடின் கிங்ஸ்லி வைத்து படக் காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

படத்தின் கதாநாயகனான வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு சீக்கிரமாக வந்துள்ளார். ஆனால் ரெடின் கிங்ஸ்லி 2 மணி நேரமாகியும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. மேலும் வடிவேலு ரெடின் கிங்ஸ்லி வரும் வரை பொறுத்திருந்து உள்ளார். பல மணி நேரம் கழித்துதான் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.

மேலும் ரெடின் கிங்ஸ்லி டாக்டர் படம் வெற்றி பெற்றதால் தற்போது சினிமாவில் அதிக பந்தா காட்டி வருவதாகவும். அதுமட்டுமில்லாமல் இயக்குனரிடம் தனக்கு பிடித்த மாதிரி தான் நடிப்பேன் என்னை யாரும் எந்த கேள்வி கேட்கக் கூடாது என கட்டளை போட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். சினிமாவில் வெற்றி வந்தவுடன் வளரும் நடிகர்கள் கூட பந்தா காட்டி விடுகின்றனர் என கூறி வருகின்றன.

பின்பு ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த உடன் இயக்குனர் வடிவேலுவிடம் படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறியுள்ளார். அதற்கு வடிவேலு அதிக நேரம் ஆகிவிட்டது. தற்போது படப்பிடிப்பு தொடங்கினால் மற்ற கலைஞர்கள் சீக்கிரமாக செல்ல முடியாது. அதனால் பலருக்கும் காத்திருக்க வேண்டும். நாளைக்கு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என கூறிவிட்டு வடிவேலு சென்றுவிட்டார்.

Trending News