வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரெட் கார்டு எல்லாம் ரெக்கார்டாக மாறப்போகிறது.. வடிவேலுவை தூக்கி நிறுத்திய உதயநிதி!

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.

அதன்பிறகு அவருக்கு போட்டிருந்த அந்த தடை நீங்கிய பிறகு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு ஹீரோயினும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து வடிவேலு அடுத்தடுத்த படங்களில் தற்போது ரொம்ப பிஸியாக இருக்கிறார். மனுஷன் கையில் இப்போது கைவசம் 5 முதல் 6 வரை படங்கள் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருடைய லிஸ்ட் இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

தற்போது ரஜினி நடிக்கப் போகும் புது படத்தில் கூட  வடிவேலு கமிட் ஆக இருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதுமட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் வடிவேலுவின் பெயர்தான் முதலாவதாக இடம் பிடித்துள்ளது. அவருடைய பெயருக்கு பிறகுதான் மாரி செல்வராஜ், உதயநிதி ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

சீனியாரிட்டி படி அவர் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து படக்குழு இவ்வாறு செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரெட் கார்டு முடித்து திரும்ப வந்தவுடன் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் காமெடியில் கலக்கி மிகப்பெரிய ரெக்கார்டாக மாறப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Trending News