வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வடிவேலு வாண்டடா போய் ஏழரை கூட்டிய 5 நடிகர்கள்.. அஜித்தையே காண்டாக்கிய சம்பவம்

சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பேரும் புகழும் அதிகரிக்க அதிகரிக்க கொஞ்சம் தலைகாணமும் அதிகமாகும் தாங்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை என்பது போல் அலட்டிக் கொள்வார்கள் இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு வடிவேலு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே தேவையில்லாமல் பேசி தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கிறார்.

வடிவேலு-ராஜ்கிரண்: இன்றைய தமிழ் சினிமாவில் வடிவேலுவை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் மதுரையில் ஒரு கிராமத்தில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த வடிவேலுவை சென்னைக்கு வரவழைத்து மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தது ராஜ்கிரன் தான். ஆனால் அவர் செய்த அந்த உதவியை வடிவேலு நினைத்துப் பார்க்கவே இல்லை. ராஜ்கிரண் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நேரத்தில் வடிவேலு அவரை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.

Also Read:அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காத அஜித்.. கஷ்டப்படும் நேரத்தில் தூண் போல் நிற்கும் ஏகே

வடிவேலு-விஜயகாந்த்: வடிவேலு மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இடையேயான பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஒரு சின்ன பிரச்சனையை மிகப்பெரிய அளவில் பெரிதாக்கி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் கொண்டாடி வரும் விஜயகாந்தை பல மேடைகளில் அவமரியாதையாக பேசியவர் வடிவேலு. வடிவேலு அப்படி பேசியதற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் எந்த சினிமா வாய்ப்புகளும் இல்லாமல் தனித்து விடப்பட்டார்.

வடிவேலு-அஜித்: நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரைக்கும் சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் தன்மையானவர் என்றாலும் அவர் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறாரோ அதேபோல் மற்றவர்களும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். ராஜா படத்தின் போது, பட காட்சிகளில் பாடக்கூடாது என்று அஜித்தை அழைத்த வடிவேலு, சூட்டிங் முடிந்த பிறகும் அப்படியே தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இது பிடிக்காத அஜித் வடிவேலுவை மொத்தமாக ஓரங்கட்டி விட்டார்.

Also Read:வடிவேலுவை கேள்வி கேட்டு டென்ஷன் செய்த மீடியா.. சமாளிக்க முடியாமல் மைக்கோடு ஓடிய வைகை புயல்

வடிவேலு-மாதவன்: வடிவேலு மற்றும் நடிகர் மாதவன் கூட்டணியில் ஒரு சில படங்களின் காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் இருவருடைய காம்போ மீண்டும் தமிழ் சினிமாவில் இணையாததற்கு வடிவேலு மட்டுமே காரணம். வழக்கமான தன்னுடைய வேலையை மாதவனிடம் காட்ட அவர் மொத்தமாக இவரை ஒதுக்கி விட்டார்.

வடிவேலு-தனுஷ்: வடிவேலு நடிகர் அஜித்திடம் என்ன வேலை காட்டினாரோ அதே வேலையை தான் தனுஷிடமும் காட்டியிருக்கிறார் படிக்காதவன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது. ஆனால் தனுஷ் அஜித் அளவுக்கு படம் முடியும் வரை எல்லாம் பொறுமையாக இல்லை. உடனடியாக வடிவேலுவை தூக்கிவிட்டு அதே கேரக்டரில் விவேக் அடிக்க வைத்து படத்தை முடித்தார் தனுஷ். அந்த படத்தின் காமெடி காட்சிகளும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தன.

Also Read:8 வருடம் பட்டும் புத்தி வரல.. ஓவர் திமிரு காட்டியதால் வடிவேலுவை தூக்கி எறிந்த நடிகர்கள்

Trending News