சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மீண்டும் ஒய்யாரமாய் பறக்கும் வடிவேலுவின் கொடி.. மொத்த கரும்புள்ளியையும் வாங்கிய யோகி பாபு

யோகி பாபுவிற்கு வடிவேலு எவ்வளவோ பரவாயில்லை என்ற மோசமான பெயர் இப்பொழுது யோகி பாபுவிடம் வந்துவிட்டது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் இவரை பற்றி தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இவரால் பல தயாரிப்பாளர்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டார்கள் என்று ஆதாரத்துடன் கூறுகின்றனர்.

யோகி பாபு பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கி விட்டு ஷூட்டிங் வருவதில்லை. நடித்த படங்களுக்கும் டப்பிங் பேசுவதில்லை என இவர் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள். இவரை பற்றி ஒரு தயாரிப்பாளர் பல திடுக்கிடும் விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறார்.

மொத்த கரும்புள்ளியையும் வாங்கிய யோகி பாபு

சுமார் இரண்டு வருடங்களாக இவரை பிடிக்க ஒரு தயாரிப்பாளர் படாதபாடு பட்டு வருகிறார். நடித்து முடித்த படத்திற்கு டப்பிங் பேசவில்லை, அதனால் மொபைல் டப்பிங் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து யோகி பாபு இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுதும் இவர் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

இப்படி தயாரிப்பாளர்களை படாத பாடுபடுத்தி வரும் யோகி பாபு மீது மொத்த எதிர்ப்பும் வந்த வண்ணம் இருக்கிறது. இவர் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் சம்பளம் வாங்குகிறார் ஆனால் வெளியில் 5 லட்சங்களை மட்டுமே சம்பளமாக காட்டுகிறார் என்றெல்லாம் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

இப்பொழுது மீண்டும் வைகைப்புயல் வடிவேலுவின் கொடி பறக்க ஆரம்பித்து வருகிறது. கைவசம் ஐந்து படங்கள் வைத்திருக்கிறார் வடிவேலு. பழைய கை புள்ளையாக மாறி சுந்தர் சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்கிறார். கேங்ஸ்டர், மாரிசன் என அடுத்தடுத்து வடிவேலு கையில் ஏராளமான படங்கள் குவிந்து வருகிறது.

Trending News