வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித் எதிரியாக இருந்தாலும் அவரையே பாலோ பண்ணும் வடிவேலு.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது

Vadivelu: நகைச்சுவையிலும், எதார்த்தமான பேச்சிலும் வடிவேலுக்கு ஈடாக எந்த ஒரு காமெடி நடிகர்களும் வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு வைகைப்புயல் என்ற பட்டத்துடன் அனைவரது மனதிலும் குடி புகுந்து விட்டார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கமாக இருப்பது இவருடைய வஞ்சகம் நிறைந்த குணம் தான். வளர்த்து விட்டவரையே எட்டி மிதித்து உயரத்திற்கு வந்தவர் என்று பலரும் இவரை குற்றம் சாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜயகாந்தை ஒரு எதிரியாகவே நினைத்து பல இடங்களில் அவரை பற்றி தரை குறைவாக பேசி இருக்கிறார். அதனால் தான் என்னமோ குற்ற உணர்ச்சியால் விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த அவரால் வர முடியாமல் போய்விட்டது. இதற்கு அடுத்தபடியாக தற்போது வடிவேலு எல்லா விஷயங்களிலும் அஜித்தை ஃபாலோ பண்ணி வருகிறார்.

வடிவேலுவை பொருத்தவரை அஜித்தும் இவருக்கு ஒரு எதிரியாகத்தான் போய்விட்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ராஜா படப்பிடிப்பின் போது அஜித்தை மட்டு மரியாதை இல்லாமல் பேசிய அவமதித்திருக்கிறார். அதனாலேயே அஜித், வடிவேலுவை கண்டு ரொம்ப தூரம் ஒதுங்கி போய்விட்டார். இதையெல்லாம் தாண்டி தற்போது வடிவேலு, அஜித் மாதிரி செய்ய ஆரம்பித்து விட்டார்.

Also read: அஜித், விஜய் ரெண்டு பேரும் வேண்டாம், வெறுத்த இயக்குனர்.. மத்தளம் போல் இரு பக்கமும் விழும் அடி

அதாவது அஜித் எந்த ஒரு நல்ல கெட்டதுக்கும் போக மாட்டார். என்னுடைய வேலையை மட்டுமே நான் பார்த்து எனக்கென்று ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொள்கிறேன். என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்ற ஒரு மனநிலையில் பிரபலமாக சுற்றி வருகிறார். அந்த வகையில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அத்துடன் பத்திரிகைக்காரர்கள் இவரை கேள்வி கேட்கும் நிலைமைக்கும் ஆளாக மாட்டார்.

பொதுவாக இவருடைய நினைப்பு என்னவென்றால் ஏதாவது ஒரு இடத்திற்கு போய்விட்டால் அங்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி விடும். அதனால ஒரு பிரச்சனை வந்துவிடும் என்று தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார். இப்படி இவர் செய்யும் இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தையுமே பின் தொடர்ந்து வருகிறார் வடிவேலு.

வடிவேலுவின் தற்போதைய நிலைமை எந்த விஷயத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் எங்கேயாவது போய்விட்டால் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அத்துடன் தற்போது விஜயகாந்த் இறப்பிற்கு போகாமல் இருந்தது பெரும் அவமானமாக போய்விட்டது. அந்த குற்ற உணர்ச்சியாலே இவருடைய நிலைமை ஒரு வட்டத்திற்குளே சுருங்கி விட்டது.

Also read: குடும்பத்திற்காக முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அஜித்.. துபாய்யில் ஆக்ரோஷமாக கொந்தளித்த சம்பவம்

Trending News