வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வம்பில் மாட்டி, சந்தி சிரித்த வடிவேலுவின் சினிமா வாழ்க்கை.. இந்த 5 பேரால் ஆட்டம் கண்ட சம்பவம்

வெள்ளந்தி மனிதராக சிறந்த நகைச்சுவையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் வடிவேலு சில சமயங்களில் வாய் துடுக்காக ஏதாவது பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். ஆழம் தெரியாமல் காலை வைக்கக்கூடாது என்ற பழமொழி வடிவேலுவுக்கு நன்றாக பொருந்தும்.

இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஏதாவது ஒரு தகராறு செய்து விடுவார். அது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து அவரையே பாதித்திருக்கிறது. அவருடைய திரை பயணத்தையே ஆட்டம் காண வைத்த பல சம்பவங்களும் நடந்துள்ளது. இப்படி வடிவேலு பிரச்சனை செய்த சில பிரபலங்கள் பற்றியும், அதனால் அவருக்கு சினிமாவில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.

விஜயகாந்த்: பொதுவாகவே நடிகர் விஜயகாந்த் சக நடிகர்கள் உட்பட அனைவருக்கும் நிறைய உதவிகளை செய்யும் தங்கமான மனசுக்காரர். இவர் வடிவேலுவுக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால் நடிகர் ராஜ்கிரணுக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் தான் வடிவேலு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கு காரணமாக இருந்தவர்.

அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இவரை வடிவேலு சிறு கருத்து வேறுபாட்டின் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தின்போது கண்டபடி பேசியிருந்தார். இது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதன் பிறகு சில காலங்களிலேயே இதற்கான பலனை நடிகர் வடிவேலு அனுபவித்தார்.

அஜித்: வடிவேலு அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் ராஜா. அந்த திரைப்படத்தின் போது வடிவேலு அஜித்தை ஏக வசனத்தில் வாயா போயா என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

இயல்பாகவே அஜித் மிகுந்த மரியாதையை எதிர்பார்ப்பவர். அதே அளவிற்கு பிறருக்கு மரியாதையையும் கொடுக்க கூடியவர். அதனால் வடிவேலுவின் இந்த பேச்சை பிடிக்காமல் அஜித் அடுத்தடுத்த படங்களில் அவருடன் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

ஷங்கர்: ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான மாபெரும் வெற்றித் திரைப்படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. இந்த திரைப்படத்தில் தான் வடிவேலு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகமாக தயாரிக்க சங்கர் முடிவு செய்தார்.

அதற்காக வடிவேலுவிடம் பேசப்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டது. அதற்கிடையில் ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. என்னவென்றால் படத்தில் மேக்கப் உள்ளிட்ட வேலைகளை தன்னுடைய உதவியாளர்கள் தான் பார்க்க வேண்டும் என்று வடிவேலு கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் அவர்கள் சொல்லும் ஆட்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் சங்கருக்கு திருப்பிக் கொடுக்க மறுத்தார். இதனால் அவருக்கு சினிமா துறையில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

தனுஷ்: விவேக் தனுஷ் காமெடி கூட்டணியில் படிக்காதவன் திரைப்படம் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்தத் திரைப்படத்தில் முதலில் வடிவேலு தான் நடிக்க இருந்தார். அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் அங்கு அவருக்கு தனுசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகுதான் விவேக் அந்த படத்தில் நடித்தார்.

சிங்கமுத்து: இவர்கள் இருவரும் நீண்ட காலமாகவே நண்பர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வடிவேலு நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் சிங்கமுத்து ஒரு கேரக்டரிலாவது நடித்து விடுவார். அப்படிப்பட்ட இவர்களுக்கு சொத்து பிரச்சினையின் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இது போலீஸ், கேஸ் போன்ற லெவலுக்கு என்று மீடியாவில் பரபரப்பை கிளப்பியது. அதன் பிறகு அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிந்தனர். தற்போது சிங்கமுத்து, வடிவேலு பற்றிய பல உண்மைகளை மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

Trending News