Actor Vadivelu-Vivek: என்னதான் ஒரு காலகட்டத்தில் இவர்களுக்குள்ளே போட்டியாக நினைத்தாலும், இவர்களின் தனிப்பட்ட வெற்றிக்கு முன் இவர்கள் இணைந்து நடித்த காமெடிகள் பெரிதும் பேசப்பட்டது. மேலும் இவர்களின் காமெடிகளுக்கு என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
சக நடிகர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் எழுந்த போட்டியில், வடிவேலு தன் ஈகோவால், மார்க்கெட் சரிந்து காணப்பட்டார். அவ்வாறு இருப்பின் இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய காமெடிகள் இடம் பெற்ற 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
Also Read: ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்
மிடில் கிளாஸ் மாதவன்: 2001ல் டி பி கஜேந்திரன் இயக்கத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி நிறைந்த படம் தான் மிடில் கிளாஸ் மாதவன். இப்படத்தில் பிரபு, அபிராமி, விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அக்கா தங்கையை மணந்து கொண்ட மாப்பிள்ளைகள் ஆன வடிவேலு மற்றும் விவேக்கின் அசத்தலான காமெடிகள் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.
மனதை திருடிவிட்டாய்: 2001ல் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். பிரபுதேவா, வடிவேலு, விவேக் இவர்கள் மூவரின் காம்பினேஷனில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்ற தந்திருக்கும். அதிலும் குறிப்பாக ஐ எம் சிங் இந்த ரைன் காமெடி மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.
Also Read: தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த 5 படங்கள் .. விஜய் அஜித்துக்கும் இந்த நிலைமைதான்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: 2000ல் வெளிவந்த இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் கரண், குஷ்பூ, ரோஜா, வடிவேலு, விவேக், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி நகைச்சுவை உணர்வோடு கொண்டு செல்லப்பட்டிருக்கும்.
நந்தவன தெரு: 1995ல் கார்த்திக் மற்றும் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் தான் விவேக்-வடிவேலு இணைந்து கலக்கிய காமெடிகளின் ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. அதன்பின் பல படங்கள் இவர்கள் இணைந்து நடித்து வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மங்காத்தா 2வை பற்றி பேசினாலே எரிச்சலடையும் அஜித்.. ஓட்ட வாய் நாராயணனால் வந்த வினை
விரலுக்கேத்த வீக்கம்: 1999ல் சிறந்த நகைச்சுவை படமாக இடம் பெற்ற இப்படத்தில் வடிவேலு, லிவிங்ஸ்டன், விவேக், குஷ்பூ, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக காட்டப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக வடிவேலு- கோவை சரளாவின் காமெடிகள் காண்போரை வயிறு குலுங்க வைத்திருக்கும்.