வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷுடன் இணையும் வடிவேலு.. சுயரூபம் தெரியாமல் சிக்கிய இயக்குனர்

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். அந்தப் படத்தில் வடிவேலுவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். ஆனால் தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் படிக்காதவன் பட ஷூட்டிங்கில் நடந்த பிரச்சனைதான்.

Also read: வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

சில நாட்கள் அந்த படப்பிடிப்பில் பங்கேற்ற வடிவேலு கருத்து வேறுபாடு காரணமாக நடிக்க மறுத்தார். அதன் பிறகு தான் விவேக் அந்த கேரக்டரில் நடிக்க வந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு தனுஷ், வடிவேலு கூட்டணி எந்த திரைப்படத்திலும் இணையவில்லை. ஆனால் இப்போது மாரி செல்வராஜ் இப்படத்தில் வைகை புயல் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

தனுஷ் மறுப்பு சொல்லியும் கூட கதை பற்றி எடுத்துச் சொல்லி வடிவேலு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். அதன் பிறகு தான் இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்படி அவர் விடாப்பிடியாக இருப்பதற்கு முக்கிய காரணம் மாமன்னன் திரைப்படம் தான். அதில் வடிவேலுவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

அந்த நட்பின் அடிப்படையிலேயே மாரி செல்வராஜ் இந்த படத்திற்கும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு வடிவேலுவின் சுயரூபம் பற்றி சரியாக தெரியவில்லை. ஏனென்றால் மாமன்னன் படத்தில் உதயநிதி இருந்ததால் அவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.

இல்லை என்றால் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பது திரை உலகில் பலருக்கும் தெரியும். கால்ஷூட் விஷயத்தில் தொடங்கி சம்பளம் வரை அவர் செய்யாத பிரச்சினைகளே கிடையாது. மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கூட இவரால் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அந்த வகையில் மாரி செல்வராஜுக்கு விரைவில் வடிவேலு பற்றி தெரியவரும் என திரையுலகில் பேசி வருகின்றனர்.

Also read: வடிவேலு பகைத்துக்கொண்ட 5 ஹீரோக்கள்.. குண்டக்க மண்டக்க பார்த்திபனுடன் போட்ட சண்டை

Trending News