வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மாமன்னன் வெற்றியால் வடிவேலு போட்ட மாஸ்டர் பிளான்.. ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Maamannan-Vadivelu : வைகை புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக ஹிட் அடித்தது. இந்த படம் வியாபாரம் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதோடு, வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

வடிவேலுவை பொறுத்த வரைக்கும் அவருக்கு சினிமாவில் கடந்த பத்து வருடங்கள் ரொம்பவும் சோதனை காலமாக இருந்தது. நகைச்சுவை உலகின் முடி சூடா மன்னனாக இருந்த இவர், கிட்டதட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பட வாய்ப்பு இல்லாமல், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற அப்டேட் கூட இல்லாமல் ஒதுங்கி இருந்தார். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருடன் படம் பண்ண தயாராகவும் இல்லை.

Also Read:யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த 4 படங்கள்..சூரி சந்தானம் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் மீம்ஸ்கள் மூலம் அவருக்கு தங்கள் ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஆதரவை நம்பி நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் கம் பேக் கொடுத்த வடிவேலுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது. படம் பயங்கரமாக சொதப்பியதோடு, அவருடன் பணிபுரிந்த நிறைய கலைஞர்கள் அவரைப் பற்றி தேவையில்லாத பேட்டிகளை கொடுத்ததன் மூலம் வடிவேலுவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகி இருந்தது.

இதுபோன்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வடிவேலுவை தூக்கி விட்ட படம் தான் மாமன்னன். ஒரு நகைச்சுவை கலைஞன் ஆக மக்களை சிரித்து வைத்துக் கொண்டிருந்த வடிவேலு, இந்த படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, இப்படியும் நடித்து மக்களை கலங்கடிக்கவும் எனக்கு தெரியும் என நிரூபித்து விட்டார்.

Also Read:1000 கார்ப்பரேட் மூளையை மிஞ்சிய ரஜினி.. சன் பிக்சர்ஸ் வாரித்தின்று ஏப்பம் விட்ட சூப்பர் ஸ்டார்

மாமன்னன் படத்தின் மூலம் கடந்த பத்து வருடமாக கெட்டுப் போய்க் கிடந்த தன்னுடைய பெயரை மொத்தமாய் மீட்டெடுத்து விட்டார் வைகைப்புயல் வடிவேலு. அது மட்டுமில்லாமல் இதுதான் சமயம் என்பதை புரிந்து கொண்ட இவர், தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார். வடிவேலு இனி ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக வாங்க திட்டமிட்டு இருக்கிறார்.

மாமன்னன் படத்திற்கு பிறகு இயக்குனர் பி வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா ஆகியோர் நடித்த சந்திரமுகி 2 படம் வடிவேலுவுக்கு அடுத்த ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. இதில் வடிவேலுவின் காமெடிகள் மீண்டும் பழைய மாதிரி ஜெயித்துவிடுமா அல்லது நாய் சேகர் ரிட்டன்ஸ் போல் சொதப்பி விடுமா என இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also Read:லியோவை விட பல மடங்கு பில்டப்புடன் வெளியான ரஜினியின் படம்.. கடைசியில் மண்ணை கவியது தான் மிச்சம்

Trending News