செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

முன்பகையை வைத்து விளையாடப் போகும் வடிவேலு.. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

Vadivelu : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே அரசியல் பிரபலங்களின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இப்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் போல் சினிமா பிரபலங்களும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வது நடந்து வருகிறது. அந்த வகையில் முன்பு திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை விமர்சித்து மோசமாக பேசியிருந்தார் வடிவேலு.

சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்தையே வடிவேலு விமர்சித்தது அப்போது சர்ச்சையாக இருந்தது. இதைத் தொடர்ந்து சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவருடைய மாமன்னன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வடிவேலுவுடன் ராதிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை

இதைத்தொடர்ந்து லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு மற்றும் ராதிகா நடித்திருந்தனர். அதன் பிறகு ராதிகா வடிவேலுவை விளாசி மேடையில் பேசி இருந்தார். ஏதாவது ஒரு முறை விமானத்தில் சென்றபோது வடிவேலும் வந்திருந்தாராம்.

இந்நிலையில் சரத்குமாரின் படத்தை பற்றி வடிவேலுவிடம் ராதிகா பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது ராதிகாவின் மகன் வடிவேலுவிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் என் அப்பா உடைய படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை என நக்கலாக சிரித்துக்கொண்ட சொன்னாராம். இதை குறிப்பிட்ட ராதிகா இப்போது நீ எங்க இருக்க, நாங்க எங்க இருக்கோம் என்று விளாசி இருந்தார். மேலும் சரத்குமார், பிரபு, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் இருக்கும்போது தைரியமாக சூட்டிங் செல்ல முடியும்.

ஏனென்றால் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். இந்த முன்பகையை வைத்துக் கொண்டு இப்போது வம்பு இழுக்க உள்ளார் வடிவேலு. அதாவது ராதிகா பாஜக சார்பில் விருதுநகரில் போட்டியிட இருக்கிறார்.

அவரை எதிர்த்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நிற்கிறார். இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில் விருதுநகரில் ராதிகாவை விமர்சித்து பேச உள்ளாராம்.

மேலும் விஜயகாந்த்க்கு இப்போதாவது நன்றி கடனை செலுத்த வேண்டும் என்பதால் விஜயபிரபாகரன் பற்றி எதுவும் பேச மாட்டார் என அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Trending News