புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஏன் அதுல நடிச்சோம்னு நொந்து போன வடிவேலு.. வைகை புயலுக்கு முன்பே வெறுத்த ராட்சசன்!

Vadivelu is heartbroken to think of acting in Mamannan: சினிமாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பல தர்ம அடிகளை வாங்கி தன்னைத்தானே செதுக்கி கொண்டவர் வடிவேலு. ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுகவிற்காக களம் இறங்கி பிரச்சார பீரங்கியாக தெறிக்க விடுவார் இந்த தென்னாட்டு புயல். 

வருகின்ற லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவின் எல்லா மீட்டிங்களிலும் பங்கெடுத்து பேசி வருகிறார். இவர் நடித்த படம் ஒன்று இப்பொழுது இவருக்கு தலைவலியாய் மாறி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மீடியாக்கள் சிலர் இந்த படத்தில் எதிர்மறையான விளைவுகளை தந்ததோடு இவர் நடித்ததை பற்றி கேள்விக்கணை தொடுத்து பாடாயப்படுத்துகின்றனராம். 

இவருக்கு வரும் காமெடி காட்சிகளை சற்று மெருகேத்தி, இவரது பாணியில் கொடுத்து தனக்கென ஒரு வழியை செட் செய்து வெற்றிகரமாக இருந்து வந்தார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தில் நடித்தால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு அவரை மாமன்னன் படத்தில் நடிக்க வைத்தார். 

ஒரே அரசியலை முன்னெடுக்கும் மாரி செல்வராஜ்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள கொடுமையை வேரறுத்து சமூகத்திற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியலை பேசி வருகிறார் மாரி செல்வராஜ்.

ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எதிர்மறையாக வினையாற்றி உள்ளது இந்த மாமன்னன். வடிவேலுக்கு பெருமை சேர்த்த மாமன்னன் கதாபாத்திரமே! பெயரை கெடுத்தும் போனது.

 ஜாதி மதம் பற்றி நினைக்க மறந்த இளம் தலைமுறை தட்டி எழுப்பி  தேவையில்லாத அரசியலைப் பேசி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவதாக அமைந்துவிட்டது மாரி செல்வராஜின் மாமன்னன்.  

மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில்

இதில் வில்லனாக நடித்த ராட்சசன் ஃபகத் பாசில் தனது ப்ரொபைல் பிக்சரில் மாமன்னன் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை வைக்க அதையே கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். இதனால் பயந்து புரொஃபைல் பிக்சரை மாற்றினார் ஃபகத்.

அது மட்டும் இன்றி இந்த படத்தில் ஏன்டா நடித்தோம் என்றவாறு புலம்பி வருகிறார். இனிமேல் இதுபோன்றதொரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் உறுதியோடு இருக்கிறாராம்

Trending News