வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வைகை புயலுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா? அடேங்கப்பா, பயங்கரமான ஆளா இருக்காரே!

வடிவேலு கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய மூன்று படங்களில் மாமன்னன் படம் மெகா ஹிட்டாகி, வடிவேலுவை இன்னொரு பரிமாணத்தில் காண்பித்தது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

என்னதான் இவர் மீது பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருந்தாலும், தமிழ் மக்களின் அன்றாட ஸ்ட்ரெஸ் பஸ்டராக தான் இருக்கிறார். இவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இவரது முக பாவனைகள் இன்று மட்டும் அல்ல, இன்னும் அடுத்த தலைமுறையினருக்கும் மீம் டேம்ப்லேட் ஆகவே இருக்கும்.

இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு நடிக்க வந்திருக்கிறார் என்ற ஆர்வத்துடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் வடிவேலுவின் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

பயங்கரமான ஆளாக இருப்பார் போலையே.!

வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் அவரை புதிய பரிமாணத்தில் காட்டியது. நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால் என அனைத்திலும் காமெடி ஊறிப்போன கலைஞனை இயக்குநர் மாரி செல்வராஜ் சென்ட்டிமெண்ட்டாகவும், சூழ்நிலை கைதியாகவும் காண்பித்திருந்தார்.

மேலும் அந்த படத்தில் பாடகராகவும் கலக்கி இருப்பார். இப்போது அவர் ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கிரி, வின்னர் உள்ளிட்ட படங்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நேற்று வடிவேலு தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். தற்போது அவர் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவருக்கு மொத்தம் 150 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம்.

மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அவர் அங்கு சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார். மேலும் சென்னையில் இரண்டு பங்களாக்கள் இருக்கின்றனவாம். அதேபோல் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.

இதை கேள்வி பட்ட ரசிகர்கள்.. “சைலண்ட்டாக இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரே.. பயங்கரமான ஆளா இருப்பார் போலையே..” என்று விமர்சித்து வருகின்றனர்.

Trending News