சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் வடிவேலு.. அதிர்ச்சி கொடுத்த மாரி செல்வராஜ்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்ததை  தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் இவர்களுடன் மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்திருக்கிறார்.

இந்த படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாக மாறி விரும்புவதால் கடைசி கடைசியாக மாரி செல்வராஜின் படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால் இந்தப் படத்தின் சூட்டிங் சேலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக உதயநிதியை மெருகேற்றி வருகிறார் மாரிசெல்வராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிக்கிறார். இதுவரையில் அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று நடித்து வருகிறார்.

கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால் போல் வடிவேலுக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அதற்காக நகைச்சுவை இல்லை என்று அர்த்தமில்லை படத்தில் நகைச்சுவை இருக்கிறதாம்.

இந்த படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கிறார் வடிவேலு. இவர் ஏற்கனவே எம்டன் மகன் படத்தில் பரத்திற்கு சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க மட்டும் இல்ல அழுவும் வைத்திருப்பார்.

இப்படி சினிமாவில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் வடிவேலுவை முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக காண்பிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்தை கொடுத்து இயக்குனர் மாரிசெல்வராஜ் வித்யாசமாக அணுகியுள்ளார்.

Trending News