செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

யானை போல் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட வடிவேலு. தயாரிப்பாளர்களை ஓட விடும் மாமன்னன் மண்ணு

வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸில் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படி பழைய மாதிரி அவருக்கு வாய்ப்புகளும் படங்களும் ஹிட் ஆகவில்லை. மீண்டும் மக்கள் அவரை ரசிக்க தவறுகிறார்கள்.

இப்பொழுது வடிவேலுவை தங்கள் படத்திற்கு கமிட் செய்ய போகும் தயாரிப்பாளர்கள் எல்லாம் தலையில் துண்டை போட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த அளவிற்கு வடிவேலு கேட்கும் சம்பளத்தால் ஆடிப் போய் உள்ளனர். கைவசம் இப்பொழுது அவருக்கு படங்களும் இல்லை.

ஏற்கனவே வடிவேலுவை பற்றி அவர் குரூப்பில் உள்ள காமெடி நடிகர்கள் பலரும் குறை சொல்லி வந்தனர். இசைக்கு எப்படி இளையராஜாவோ, அதே போல் காமெடிக்கு வடிவேலு தான் என பலரும்கூறிவந்தனர். ஆனால் இளையராஜா போலவே இவரும் ஒரு பணத்தாசை பிடித்தவர். பணப்பித்தர்,பணத்துக்காக எதுவும் செய்வார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

பணம் இல்லை என்றால் வடிவேலுவிடம் எதையும் சாதிக்க முடியாது. இப்பொழுது புதிதாய் படங்களில் நடிக்க அவர் கேட்கும் சம்பளம் தான் அனைவரையும் ஆட வைத்துள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் இனிமேல் வடிவேலு பக்கம் நெருங்க கூட முடியாது.

தயாரிப்பாளர்களை ஓட விடும் மாமன்னன் மண்ணு

சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் வடிவேலுவை சந்திக்க சென்றுள்ளார். அவர் எடுக்கும் படத்தின் பட்ஜெட்டே எட்டு கோடி தான். ஆனால் வடிவேலு கேட்கும் சம்பளமோ 6 கோடிகள். இதனால் அந்த தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு விட்ட அப்படியே வெளியே வந்திருக்கிறார்.

செகண்ட் இன்னிங்ஸில் வடிவேலு நடித்த மூன்று படங்களுள் மாமன்னனை தவிர மற்ற இரண்டு படங்களும் தோல்வியை தான் சந்தித்துள்ளது. மாமன்னன் படத்திலும் வடிவேலு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் சந்திரமுகி 2 இரண்டு படங்களுமே படுதோல்வி அடைந்தது.

சித்திரவதை அனுபவிக்கும் வடிவேலு

Trending News