ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நிம்மதி பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்கள்.. பாடாய் படுத்தி எடுத்த வடிவேலு

ரசிகர்கள் மீண்டும் வடிவேலு நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடிக்க வந்து விட்டார். இப்பொழுது ரெட் கார்ட் தடை எல்லாம் முடிந்து மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.

அவர் வந்ததிலிருந்தே மீமீஸ் பறந்து வருகின்றன. அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்க இருப்பதால், பிரபுதேவாவுடன் பழைய காமெடியை மீண்டும் புதுப்பித்து நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.

அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு வடிவேலு மீது ஒரு பெரிய ஆசை இருந்து வந்தது. இவர் ஒழுங்காக சூட்டிங் வருவாரா, படத்தை முடித்து தருவாரா, மறுபடியும் வாய் வம்பு பேசி படத்தை கெடுத்து விடுவாரா என்பது போன்ற அச்சம்தான்.

ஆனால் ஒழுங்காக சூட்டிங் வந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தையும் முடித்து கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் இருக்கிறதாம். வடிவேலும் சிவானியும் நடிக்கும் மான்டேஜ் பாட்டுதான் அது. அது மட்டும் முடிந்தால் படம் ரெடி.

ஒரு காலத்தில் வடிவேலுவை பார்த்து பயந்து ஓடிய எல்லா தயாரிப்பாளர்களிடமும் நான் அப்படி இல்லை என அவர் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கும் அடுத்தடுத்த படங்களின் மூலம் தன்னை நிரூபித்து விட்டார் வடிவேலு. இதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் தற்போது வடிவேலுவை வைத்து படம் எடுக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.

எனவே சிலகாலம் சினிமாவில் நுழைய முடியாமல் பரிதவித்து கொண்டிருந்த வடிவேலு தற்போது துவங்கியிருக்கும் இரண்டாம் இன்னிங்சை சரியாக பயன்படுத்தி, அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News