புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்சேதுபதிக்கு போட்டியாக ஆள் வந்தாச்சு.. விஸ்வரூபம் எடுக்கும் பழைய நடிகர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் வைகைப்புயல் வடிவேலு. ஹீரோக்களை காட்டிலும் வடிவேலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த அளவுக்கு இவரது காமெடி இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். தற்போது வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கிவரும் மாமன்னன் படத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து வடிவேலு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

மாரி செல்வராஜ் படத்தை முடித்தவுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். இப்படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு வடிவேலு தான் சிறப்பாக நடிக்க முடியும் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி படத்திலும் வடிவேலு கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் வடிவேலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 63வது படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் வடிவேலு நடிக்க தடை காலம் முடிந்தவுடன் முழு வீச்சாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இனி தொடர்ச்சியாக வடிவேலுவின் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News