செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மாமன்னனுக்கு முன்னரே வடிவேலு சம்பவம் செய்த 5 படங்கள்.. நாசரிடம் கருப்பட்டியாக வாங்கிய அடி

Vadivelu 5 Hit Movies: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு. அவர் நடித்த திரைப்படங்களின் காட்சிகள் மீம்ஸ், ட்ரோல்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில காலங்களாக அவருக்கு எந்த திரைப்படங்களிலும் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகனாக பயங்கரமாக நடித்து இருப்பார். மாமன்னனுக்கு முன்னரே 5 படங்களில் இதுபோலவே தெறிக்க விட்டிருப்பார், அவைகள் ஒரு கண்ணோட்டம்.

பொற்காலம்: சேரன் இயக்கத்தில் முரளி மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான படம் “பொற்காலம்”. இத்திரைப்படத்தில் வடிவேலு முரளியிடம் வேலை செய்பவனாகவும், நல்ல ஒரு நண்பனாகவும் இருப்பார். முரளிக்கு ஒரு வாய் பேச முடியாத தங்கை இருப்பார்.முரளி மண்பானை, மண்ணில் கலை பொருட்கள் செய்வது வேலையாக வைத்திருப்பார். எவ்வளவு கஷ்டப்பட்டாவது தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்திருப்பார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரதட்சணை கேட்டதும் பயங்கர கஷ்டப்படுவார். வடிவேலு அந்த சமயத்தில் நான் திருமணம் செய்து கொள்கிறேன் எந்த ஒரு வரதட்சணையும் இல்லாமல் என சொல்லி தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read:கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. உங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என மேடையில் உருகிய அபிராமி

சங்கமம்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வடிவேலு ஹரிதாஸ் கேரக்டரில் நடித்து வெளியான திரைப்படம் சங்கமம். இதில் ரகுமான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ராதாரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் வடிவேலு இணைந்து நடித்துள்ளார். திரைப்படத்தில் மணிவண்ணனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்து தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பினையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படத்திற்கு 47வது நேஷனல் ஃபிலிம் அவார்ட், தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் போன்ற விருதுகளும் கிடைத்துள்ளது. வடிவேலு தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார்.

ராஜகாளியம்மன்: ராம நாராயணன் இயக்கத்தில் கரண், ரம்யா கிருஷ்ணன், கௌசல்யா இவர்களுடன் வடிவேலுவும் நடித்து வெளியான திரைப்படம் ராஜகாளியம்மன். இத்திரைப்படத்தில் வடிவேலும் அவருடைய தங்கையும் கடவுள் பக்தி உடையவர்களாக இருப்பார்கள். தங்கைக்கு திருமணம் ஆகிறது, மாப்பிள்ளையும், அவனுடைய சகோதரியும் சேர்ந்து வடிவேலுவை கொன்றுவிடுவார்கள். திரைப்படத்தில் தனது வெகுளியான நடிப்பினால் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு நன்றாக நடித்திருப்பார்.

Also Read:ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

எம்டன் மகன்: திருமுருகன் இயக்கத்தில் வடிவேலு கருப்பட்டி அய்யாக்கண்ணு ஆக நடித்து வெளியான திரைப்படம் எம்டன் மகன். இதில் பரத், கோபிகா, நாசர், சரண்யா போன்றவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சரண்யாவிற்கு தம்பியாக நடித்து நாசரிடம் மாட்டி பயங்கர அடி வாங்கினாலும் குடும்பத்திற்கு, எப்போதும் துணையாக இருப்பார். இது இவருக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

காமராசு: அன்பழகன் இயக்கத்தில் வெளியான காமராசு திரைப்படத்தில் இவர் வேலுவாக நடித்திருப்பார். திரைப்படம் உடல் உறுப்பு தானத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முரளி, லைலா, ஸ்ரீவித்யா, நிர்மலா போன்றோர் இவருடன் இணைந்து நடித்துள்ளனர். முரளிக்கு மிகவும் ஆதரவாக சிறந்த தோழனாகவும் நடித்திருப்பார். இதுவும் இவருக்கு வெற்றியாக அமைந்து நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம்.

Also Read:300 நாட்கள் கால்ஷீட், தலை தெறிக்க ஓடிய அஜித்.. கதை பிடித்தும் நடிக்க முடியாமல் போன காரணம்

Trending News