தமிழ் சினிமாவில் தங்களுடைய அற்புதமான நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்த காமெடி ஜாம்பவான்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அதில் வைகை புயல் வடிவேலுக்கு ஒரு அசைக்க முடியாத இடம் இருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவை பல வருடங்களாக தாங்கி நிற்கும் பில்லர் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு அவர் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை இன்று வரை மகிழ்வித்து வருகிறார். அவருடைய இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை அவர் சந்தித்திருக்கிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் இந்த 35 வருட சினிமா வளர்ச்சி பற்றிய ரகசியங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பொதுவாக நகைச்சுவை நடிகர்களுக்கு முக்கியமானது அவர்களுடைய பாடி லாங்குவேஜ் தான். அது வடிவேலுவிற்கு இயல்பாகவே வரும் அப்பேற்பட்ட பாடி லாங்குவேஜ் வைத்து தான் அவர் இன்று வரை சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார்.
போடா போடா புண்ணாக்கு என்ற பாட்டில் ஆரம்பித்த அவருடைய பயணம் இன்று 23ஆம் புலிகேசி, நாய் சேகர் போன்ற படங்கள் வரை நீண்டு கொண்டிருக்கிறது. ஒரு நகைச்சுவை கலைஞனாக இருந்த அவர் இன்று ஒரு ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் அசுர வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் மதுரை தான் என்று வடிவேலு கூறுகிறார். அதாவது வடிவேலுவுக்கு இந்த மாதிரி பாடி லாங்குவேஜ் வருவதற்கு காரணம் மதுரையில் உள்ள ரிக்ஷாகாரர்களும், தெருவில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் தான்.
எப்படி என்றால் வடிவேலு அவர்களிடம் தான் இது போன்று பேசுவதை கற்றுக் கொண்டாராம். அதுதான் அவருடைய திரை உலக வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக வடிவேலு மனம் திறந்து கூறி இருக்கிறார். அந்த வகையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பயங்கர பிசியான நடிகராக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.