Vadivelu-Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்தது. அதேபோல் தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கேப்டனை வழி அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஒரு சில பிரபலங்கள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. அதில் முக்கால்வாசி பேர் வெளிநாட்டில் இருந்ததாக வீடியோவை வெளியிட்டு வேலையை முடித்து விட்டனர். ஆனால் உள்ளூரில் இருந்து கொண்டு வடிவேலு வராதது இப்போது வரை விமர்சனமாக இருக்கிறது.
உண்மையில் அவர் மட்டும் வந்திருந்தால் தொண்டர்களால் நிச்சயம் தாக்கப்பட்டிருப்பார். அந்த பயம் அவருக்கும் இருந்திருக்கும் அதனாலேயே அவர் வரவில்லை என்ற கருத்துக்களும், யூகங்களும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
Also read: கேப்டனை துச்சமாக நினைத்த தளபதி விஜய்.. உண்மையை வெட்ட வெளிச்சமாகிய எஸ்ஏசி
ஆனால் குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பது போல் இருக்கிறது அவருடைய செயல். தற்போது மன்சூர் அலிகான் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அதாவது வடிவேலுவை அஸ்திவாரமாக பயன்படுத்திய திமுக கட்சியே கேப்டனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
முதல்வர் மு க ஸ்டாலின் கேப்டனுக்கு கொடுக்க வேண்டிய ராணுவ மரியாதையை கொடுத்து சிறப்பாக வழி அனுப்பி வைத்தார். ஆனால் வடிவேலு வரவில்லை. இப்போது அதை பத்தி பேச வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் கேப்டன் மேல் அன்பு கொண்ட அத்தனை பேர் இருக்கும் போது வடிவேலுவை பற்றி எதற்காக நினைக்க வேண்டும். அதைத்தான் மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் நாசுக்காக குறிப்பிட்டு இருந்தார். ஆக மொத்தம் ஏற்கனவே வடிவேலுவின் பெயர் டேமேஜ் ஆகி இருந்த நிலையில் இப்போது மொத்தமாக வெறுக்கப்படும் நபராக மாறி இருக்கிறார்.
Also read: விஜயகாந்தை கோமாளியாக்க நடந்த அரசியல் சதி.. இயல்பான குணத்தால் வென்ற கேப்டன்