சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜயகாந்த்துக்கும், வடிவேலுக்கும் இதுதான் வித்தியாசம்.. தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த மாமன்னன்

Vijayakanth: நடிகர் விஜயகாந்த் மறைந்ததிலிருந்து அவருடைய வள்ளல் குணம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விஜய்காந்தால் வளர்த்து விடப்பட்ட நடிகர் வடிவேலு அவரைப் பற்றி தவறாக பேசிய வீடியோக்களும் இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதனாலேயே வடிவேலு செய்த சில மோசமான விஷயங்களும் வெளியில் வர ஆரம்பிக்கிறது.

பொதுவாக காமெடி நடிகர்கள் தங்களுடன் நடிப்பதற்கு என்று சில குழுக்களை வைத்திருப்பார்கள். வடிவேலு மற்றும் விவேக்குக்கு என்று தனித்தனி குரூப் அப்படி உண்டு. அப்படி தன்னுடைய குரூப்பில் இருந்தவர்களுக்கு வடிவேலு சரியாக சம்பளம் கொடுத்ததில்லை என சொல்வது உண்டு. அதேபோன்று தன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் பெண் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என வடிவேலு வற்புறுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வரும் வடிவேலுவை தலையை தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தது சோசியல் மீடியாக்கள் வளர்ந்த பிறகு தான். வடிவேலுக்கு என்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அப்படி கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்காக வைத்திருந்தார் தன் மகளின் கல்யாணத்தை நடத்திய விதம்தான் இப்போது வெளியில் வந்திருக்கிறது.

Also Read:வடிவேலு அவமானப்படுத்தியும் கூப்பிட்டு பேசிய கேப்டன்.. கூலிங் கிளாஸ் போட்டு அசிங்கப்பட்ட சம்பவம்

வடிவேலுவின் கடைசி மகள் கலைவாணியின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வடிவேலு சினிமா பிரபலங்கள் யாரையும் கூப்பிடவில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள் என இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருந்தார். ஆனால் வடிவேலு மகள் திருமணம் நடக்கிறது என தெரிந்ததும் அவரைப் பார்க்கும் ஆசையில் 1500 பேர் கிட்ட அந்த திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார்கள்.

திருமணத்திற்கு வந்த ரசிகர்கள் சாப்பிட்டு போனதற்கு பிறகு கேட்டரிங் சர்வீஸ் ஆட்கள் இதை சொல்லி வடிவேலுவிடம் அந்த 1500 பேருக்கும் சேர்த்து பணம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் வடிவேலு யாரைக் கேட்டு இதை செஞ்சீங்க, என்னால் பணம் தர முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டு கொடுத்து பிரச்சனையை சமாதானம் செய்திருக்கிறார்.

கோலாகலமாக நடந்த விஜயகாந்த் திருமணம்

வடிவேலுவின் இந்த செயலை பார்க்கும் பொழுது கேப்டன் விஜயகாந்தின் திருமணம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. விஜயகாந்த்- பிரேமலதா தம்பதிகளின் திருமண மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று இருக்கிறது. அங்கே அவருடைய ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டதோடு, மதுரையில் உள்ள நிறைய மண்டபங்களை புக் செய்து அங்கே ரசிகர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் படி ஏற்பாடு செய்திருக்கிறார் விஜயகாந்த்.

ஓபன் டைப் காரில் மணமக்கள் அமர்ந்து மதுரையின் பெரும்பாலான தெருக்களில் ஊர்வலம் வந்திருக்கிறார்கள். மதுரை மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த் படி செய்து இருக்கிறார். இப்படி ஒரு வள்ளலாக இருந்த விஜயகாந்தை ஒப்பிடும்போது வடிவேலு செய்த மட்டமான வேலை தற்போது நெகட்டிவ் விமர்சனம் ஆக வெளியில் வந்திருக்கிறது.

Also Read:விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

Trending News