வடிவேலு சில தடைகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் ஹீரோ, காமெடியன், குணச்சித்திரம் என்று அடுத்தடுத்த திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பல பிரச்சனைகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் வடிவேலு நான் யாரையும் மதிக்க மாட்டேன் என்ற ரீதியில் ரொம்பவும் அடாவடி செய்து வருகிறாராம். அவர் இப்போது பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் இரண்டு நாட்களாக இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.
Also read: வடிவேலுவை ஓரம் கட்ட வரும் காமெடி நடிகர்.. ரீ என்ட்ரியில் தரமான சம்பவம் இருக்கு
அதேசமயம் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் அதே நாளில் தான் நடைபெறுகிறதாம். வடிவேலுவின் துரதஷ்டம் குறிப்பிட்ட அந்த நாட்களில் இந்த இரண்டு படங்களிலும் அவர் நடித்தே ஆக வேண்டிய கட்டாயம். அதனால் அவர் பி வாசுவிடம் நான் நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்பட சூட்டிங் செல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு இயக்குனர் இன்னும் ஒரு நாள் மட்டும் தான் உங்களுடைய காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதையும் முடித்து விட்டீர்கள் என்றால் இனிமேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் பேச்சை மதிக்காத வடிவேலு நான் சென்றே தீர வேண்டும் என்று கூறிவிட்டு படப்பிடிப்பை விட்டு சென்று விட்டாராம்.
Also read: அசல் கோலாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு.. கடும் கோபத்தில் ஷங்கர்
இவ்வளவு சொல்லியும் வடிவேலு கேட்காமல் சென்றதால் கோபமடைந்த பி வாசு சைலன்டாக ஒரு வேலையை செய்திருக்கிறார். அதாவது வடிவேலு நடிக்க இருந்த அந்த முக்கிய காட்சியை அவர் படத்திலிருந்து தூக்கி இருக்கிறார். வடிவேலுவின் இந்த அலப்பறையால் ஒட்டுமொத்த பட குழுவும் இப்போது அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே வடிவேலும் மீது அடுத்தடுத்த புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது. எக்கச்சக்கமாக சம்பளம் கேட்பது, கால்ஷூட் பிரச்சனை என்று ஒவ்வொன்றாக கிளம்பி கொண்டிருக்கிறது. இதில் கிடைத்த வாய்ப்பையும் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் வடிவேலுவை பற்றி தான் திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.
Also read: பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு.. எங்க பேனர்ல நடிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்ட நிறுவனம்