Comedian Vadivelu: படத்தில் நகைச்சுவைக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் சினிமாவில் எண்ணற்ற காமெடியன்கள் தோன்றினாலும், இவரின் காமெடியை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன் நடிப்பினை வெளிக்காட்டியவர் தான் வடிவேலு.
தன் தோற்றத்தாலும், டைமிங் பஞ்சாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சிறந்த காமெடியானாய் வலம் வருகிறார். அவ்வாறு இவரின் காமெடியால் வெற்றி கண்ட 6 படங்களை பற்றி இங்கு காண்போம்.
சுந்தரா ட்ராவல்ஸ்: 2002ல் வெளிவந்த இப்படத்தில் வடிவேலு மற்றும் முரளி இணைந்து கலக்கிய காமெடிகள் வேற லெவலில் இருக்கும். பேருந்தை மையமாக கொண்டு இவர்கள் எழுப்பிய காமெடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக எலியை வைத்து இவர் செய்த ரகளை பெரிதளவு ரசிக்க வைத்தது.
வின்னர்: சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பிரசாந்த் மற்றும் வடிவேலு இணைந்து காமெடியில் அசத்திருப்பார்கள். கைப்புள்ள கதாபாத்திரத்தில் இவர் மேற்கொண்ட நகைச்சுவை மக்களிடையே பெரிதளவில் பேசப்பட்டது. அதிலும் இது வாலிப வயது, மேலும் இது போன வாரம், நான் சொல்றது இந்த வாரம் என எழும் இவரின் வசனம் மக்களை மிகவும் ஈர்த்த ஒன்றாகும்.
Also Read: இழுபறியில் இருக்கும் லியோ பிசினஸ்.. ரெட் ஜெயண்டை ஓரம் கட்டியதால் சூட்சமம் செய்யும் டாப் நிறுவனம்
ஏய்: வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார் உடன் இணைந்து வடிவேலு காமெடியில் கலக்கி இருப்பார். மேலும் ஹீரோயினாய் நமிதாவின் அக்கா தங்கை கேரக்டரில் இவரை போட்டு வாங்கும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
தலைநகரம்: சுந்தர் சி படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லை அதிலும் வடிவேலு உடன் இவரும் இணைந்து அசத்திய காமெடிகள் பெரிய லெவெலில் ரீச் ஆனது. நாய் சேகர் கேரக்டரில் இடம்பெற்ற வடிவேலுவின் தோற்றமும், அவரின் நடை உடை பாவணையும், நானும் ரவுடிதான் என்ற வசனமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
Also Read: இந்த காம்போவில் இனிமே நடிக்க வாய்ப்பே இல்லாத 5 நடிகர்கள்.. ஈகோ தலைக்கேறிய சந்தானம்
மருதமலை: இப்படத்தில் அர்ஜுன் மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் உருவான காமெடிகள் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதிலும் என்கவுண்டர் ஏகாம்பரமாய் வடிவேலு அர்ஜுனிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுபடும் காட்சிகள் இன்றும் பெரிதாய் பேசப்படும் நகைச்சுவைகளில் ஒன்றாகும்.
ஆதவன்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நகைச்சுவையில் இடம் பெற்றிருப்பார் வடிவேலு. மேலும் மும்பை ஜிகர்தண்டா தூத் குடித்துவிட்டு இவர் செய்யும் அலப்பறை மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
Also Read: ஒடுக்கும் சமூகத்தினரின் கதையை வைத்து ஹிட் அடித்த 5 படங்கள்.. பிளாக்பஸ்டரில் பட்டையை கிளப்பிய சூர்யா