வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வடிவேலுவை தூக்கிவிட நடக்கும் சதி திட்டம்.. யோகி பாபுவின் மார்க்கெட்டை உடைக்க ப்ளூ சட்டை போடும் நாடகம்

Vadivelu And Yogibabu: ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் ஒன்றாக கூட்டணி போட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் இவர்களையே ஓரம் கட்ட வடிவேலு வந்தார். அவருடைய உடல் மொழி மற்றும் நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த சமயத்தில் வெளியான டாப் நடிகர்களின் படத்தில் வடிவேலு தான் நடித்து வந்தார்.

நாம் உயரம் செல்ல செல்ல அடக்கம் என்பது மிகவும் முக்கியம். சினிமாவில் வடிவேலு கோலோச்சி சென்ற போது ஆணவம் வந்துவிட்டது. இதனால் தன்னுடைய படத்தின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிக்காமல் வடிவேலு நடந்து கொண்டார். ஆகையால் சில காலம் சினிமாவில் வடிவேலு நடிக்க கூடாது என ரெட் கார்டு தடை போடப்பட்டது.

Also Read : பிரபல இயக்குனரால் துரத்தி அடிக்கப்பட்ட வடிவேலு.. ஓவர் பப்ளிசிட்டியால் மார்க்கெட் இழக்கும் பரிதாபம்

இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வடிவேலு நடித்து வருகிறார். ஆனால் நினைத்தபடி தற்போது வடிவேலுக்கு மார்க்கெட் இல்லை. இவர் இல்லாத இடைப்பட்ட காலத்தில் யோகி பாபு சினிமாவில் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டார். அவருடைய டைமிங் காமெடியை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் வடிவேலுவின் காமெடி ரசிகர்களிடம் செல்லுபடி ஆகவில்லை. ஆகையால் ப்ளூ சட்டை மாறன் வடிவேலின் பேச்சுக்கு இணங்க சில விஷயங்களை செய்து வருகிறார். அதாவது யோகி பாபுவின் மார்க்கெட்டை உடைக்க சதி திட்டம் நடந்து வருகிறது. மற்ற காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் போன்றோருக்கு தரமான ரைட்டர்கள் கிடைத்துள்ளார்கள்.

Also Read : மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ரத்த சொந்தமா? இணையத்தில் கசிந்த மொத்த கதை

ஆனால் யோகி பாபுவிடம் அப்படி தரமான ரைட்டர்கள் இல்லை என்று ப்ளூ சட்டை கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி பரியேறும் பெருமாள், ஆண்டவன் கட்டளை, மண்டேலா மற்றும் பொம்மை நாயகி போன்ற கேரக்டர்களில் யோகி பாபு நடித்தால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் காமெடியனாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அது ரசிகர்களான உங்களுக்கு அருமையாக இருக்கிறதா அல்லது சத்தியமா சிரிப்பே வரலையா என வாக்கெடுப்பு நாடகம் போட்டிருக்கிறார். அதில் பெரும்பாலானோர் சிரிப்பே வரலை என்ற வாக்களித்தது போல இருக்கும் ஸ்கிரீன் ஷாட்டை தனது சமூக வலைத்தளத்தில் போட்டு யோகி பாபுவின் மார்க்கெட்டை கீழே தள்ள சூழ்ச்சி செய்திருக்கிறார்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது.. லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

Trending News