சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

நடிகைகளை வளைக்க வடிவேலு சொன்ன கேவலமான பொய்.. தோலுரித்த சிங்கமுத்து

நடிக்கும் படகங்களிலும் சரி, ஏற்கும் பாத்திரங்களிலும் சரி முந்தைய காலங்களில் நடிகர்களும், நடிகைகளும் தங்களுடைய வயதினை குறைத்தே வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக நடிகைகளை பலர் தங்களது வயதினை குறைத்து கூறுவது வழக்கம். சிலர் தங்களுக்கு திருமணம் ஆனதை கூட மறைத்துவைத்துளனர். ஆனால் இப்பொழுதுள்ள டிஜிட்டல் காலத்தில் அது முடியாத விஷயமாகி போயுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு காலம் கொடிக் கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. இது எந்த படம் என்பது கூடதெரியாமல், அந்த படத்தில் இடம் பெரும் இவரின் காமெடி காட்சிகளை மட்டும் ரசிகர்கள் தெரிந்து வைத்து இருக்கும் அளவிற்கு பெரும் உயரத்தில் இருந்தார் வடிவேலு. காமெடியன் மட்டுமின்றி நடுவில் அவர் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மாபெரும் வெற்றியால் சில படங்களில் நாயகனவும் நடிக்க தொடங்கினர்.

பின்னர் திடீரென நடிகர் விஜயகாந்துடன் மோதல், தி.மு.க விற்கு அரசியல் பிரச்சாரமும், உடன் இருந்த நடிகர் சிங்கம் முத்துடனான மோதல் என சர்ச்சைகளில் சிக்கி வாய்ப்புகள் குறைந்து வீட்டில் முடங்கினார். தற்போது மீண்டும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலுவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி வரும் சிங்கமுத்து தற்போது மற்றொரு சம்பவத்தை கூறியுள்ளார். வடிவேலு கதாநாயகனாக நடித்து வந்த படத்தில் சிங்கமுத்துவும் நடித்து வந்துள்ளார். அப்பொழுது ஒரு முறை வடிவேலுவின் மகன்  ஷூட்டிங்கிற்கு வர, இவர் யார் என அந்த அப்படத்தில் நடித்த கதாநாயகி கேட்க, அவரிடம் இது என்னுடைய அண்ணன் மகன் என அறிமுக படுத்தியுள்ளார்.

அந்த படத்தின் பெயரையும், அந்த கதாநாயகியின் பெயரையும் குறிப்பிடாமல் சிங்கமுத்து இந்த சம்பவத்தை தற்போது கூறியுள்ளார். வடிவேலு அவ்வாறு செய்தது தனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் கூறினார். தன்னுடன் நடிக்கும் கதாநாயகியிடம் தனக்கு வாலிப வயதில் ஒரு பெரிய மகன் உள்ளார் என அறிமுக படுத்தினால், தன்னுடன் நாயகிகள் யாரும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் வடிவேலு  நடிகைகளை வளைக்க இவ்வாறு கேவலமான பொய் சொல்லியதாக கூறினார்.

புகழ் உச்சியின் போதையில் வடிவேலு நிறைய தவறுகளை செய்து படங்களில் இருந்து முற்றிலும் காணாமல் போனார். பிரச்சாரங்கள் போது செருப்பை தூக்கி அடித்தது முதல் நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என முரண்டுபிடித்து தற்போது அனைத்தையும் இழந்து இருக்கும் வடிவேலு அவைகளை களைந்து மீண்டும் தங்களை எப்பொழுது சிரிக்க வைப்பார் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

Trending News