Vairamuthu: வைரமுத்து, இளையராஜா இருவருக்கும் மறைமுக பனிப்போர் இருப்பது தெரிந்தது தான். ஆனால் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் கவிப்பேரரசு பேசியது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அதாவது படிக்காத பக்கங்கள் பட விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்கு பாட்டா? இசையா? மொழியா? என பேசி இருந்தார். அதற்கு கங்கை அமரன் கடும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.
இளையராஜாவால் தான் வைரமுத்து வளர்ந்ததாகவும் கூறியிருந்தார். தற்போது அவருடைய பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு காரணமான வைரமுத்து
கங்கை அமரன் வைரமுத்துவை இழிவுபடுத்தும் விதமாக பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு பின்னால் சனாதன கும்பல் இருக்கும் திமிரில் இப்படியெல்லாம் பேசுகிறார்.
வைரமுத்து அவர்களுக்கு எதிராக அரசியல் செய்பவர். அதனால்தான் சனாதனிகள் கங்கை அமரனை தூண்டிவிட்டு இப்படி ஒரு இழிவான வேலையை செய்து இருக்கின்றனர். இளையராஜாவே இதை விரும்ப மாட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும் வைரமுத்து அந்த விழாவில் பேசிய போது இளையராஜா பற்றி எந்த இடத்திலும் தவறாக பேசவில்லை. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் கங்கை அமரன் அரைவேக்காடு மாதிரி பேசிவிட்டார் என தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வைரமுத்து இளையராஜாவை விட்டு பிரிந்த பிறகு பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்ற கருத்தையும் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.