ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

யோகி பாபு ஒரு கடஞ்செடுத்த குப்பை.. பணத்தை பதுங்கும் மண்டேலா, விளாசிய பிஸ்மி, அந்தணன்

Yogi Babu : யோகி பாபுவின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. ஒருபுறம் காமெடி படங்களில் நடித்து வரும் நிலையில், மற்றொருபுறம் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வருகிறது.

அதாவது யோகி பாபு கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங் வர மறுக்கிறாராம். இவரால் படம் எடுக்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வலைப்பேச்சு சேனலில் கூறிவிட்டனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக எதிர்த்து யோகி பாபு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதாவது வலைப்பேச்சு பத்திரிக்கையாளர்களை நான் கவனிக்கவில்லை என்பதால் என் மீது அவதூறான விஷயங்களை அளித்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

யோகிபாபுவை கடுமையாக விமர்சித்த வலைப்பேச்சு பத்திரிகையாளர்கள்

அதாவது அவர்களுக்கு பணம் கொடுத்து தான் திருப்தி படுத்தவில்லை என்பதால் என் மீது அவதூறாக பேசுகிறார்கள் என்று கூறினார். இப்போது மீண்டும் வலைப்பேச்சி பிஸ்மி, அந்தணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் நேரடியாகவே யோகிபாபுக்கு சவால்விடம் படி சில விஷயங்களை கூறியிருக்கிறார்கள்.

யோகி பாபு ஒரு குப்பை மேடு, அவரை வேண்டும் என்றால் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளோடு முருகன் கோயிலுக்கு வரச் சொல்லி சத்தியம் செய்கிறோம் என்று வலைப்பேச்சு பத்திரிக்கையாளர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் அவரது சம்பளம் மட்டும் ஒரு நாளைக்கு 25 லட்சம்.

ஆனால் அதில் 5 லட்சம் மட்டும் கணக்கு காட்டிவிட்டு மற்றவற்றை கருப்பு பணமாக வாங்கி பதுக்குகிறார் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சவாலை யோகி பாபு ஏற்பாரா அல்லது பதிலடி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மார்க்கெட் உயர்ந்ததும் பிகு பண்ணும் யோகி பாபு

Trending News