திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இளையராஜா செய்றது பக்கா அயோக்கியத்தனம்.. இசைஞானியின் அந்த வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிஸ்மி

Ilaiyaraja: சர்ச்சை என்றாலே இளையராஜா என்று சொல்லும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது தன்னுடைய பாடலுக்கு ராயல்டி கேட்டு அவர் செய்யும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு எதிராகவே மாறி வருகிறது.

அப்படித்தான் தற்போது கூலி படத்திற்கு அவர் நோட்டீஸ் விட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி இளையராஜாவை கடுமையாகவே விமர்சித்துள்ளார். அதன்படி கூலி பட விவகாரத்தில் தங்க மகன் பாடலை உபயோகப்படுத்தி விட்டதாக தான் குற்றச்சாட்டை இருக்கிறது.

இளையராஜாவின் கர்வம்

உண்மையில் அந்த படத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனமே வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர் எதற்கு முந்திரிக்கொட்டை மாதிரி நோட்டீஸ் விடுகிறார்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. அந்த நோட்டீஸில் லோகேஷ் தொடர்ந்து இது போல் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதில் விக்ரம் படத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில் பழைய விக்ரம் படத்தை தயாரித்தது கமலுடைய நிறுவனம் தான். அவர்கள் மீண்டும் அதே படத்தை தயாரிக்கும் போது அந்த பாடலை உபயோகப்படுத்தியுள்ளனர்.

இசைஞானியை விமர்சித்த பிஸ்மி

இதில் இளையராஜா பணம் வேண்டும் என்று கேட்பது பக்கா அயோக்கியத்தனம். இதிலிருந்து அவருடைய பணவெறி தெரிகிறது. அதுவே அவருடைய அறிவையும் மழுங்கடித்து விட்டது.

அதனாலேயே இப்போது ஹார்மோனிய பெட்டியை ஓரம் கட்டி விட்டு கல்லாப்பெட்டியை திறந்து விட்டார். வயசு ஏற ஏற பக்குவமும் பணத்தின் மீதான ஆசையும் குறையும்.

ஆனால் இசைஞானி இன்னும் அதே பணவெறியுடன் தான் இருக்கிறார் என பிஸ்மி குறிப்பிட்டுள்ளார். ஒரு வகையில் இது தான் இப்போது ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

Trending News