புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இப்படி ஏமாத்திட்டாங்க? பிளாப்பா வலிமை.? கதறிய ரசிகர்கள்., ட்விட்டரில் ட்ரெண்டிங் வேற!

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான படம்தான் வலிமை. போனி கபூரின் தயாரிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்த்தது. இப்படிப்பட்ட படம் மிக பிரம்மாண்டமாக ரசிகர்கள் 2 ஆண்டுகள் இந்த படத்திற்காக காத்திருந்து இறுதியாக இந்த படத்தின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு கோலாகலமாக இன்று திரையரங்குகளில் வெளியானது.

படத்தை பார்க்க செல்லும் முன்பு ரசிகர்கள், இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் செய்யாத அளவுக்கு மீறிய அலப்பரைகள் செய்தனர் அஜித் ரசிகர்கள். சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து அதில் ஏறி ஆடுவது, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய வாகனங்களின் மீது ஏறி குத்தாட்டம் போடுவது, என ரசிகர்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. சரி இரண்டு ஆண்டுகள் கழித்து படம் வருகிறது.படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கப்போகிறது என்று படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

திரையங்கிற்குள் சென்று, படம் ஆரம்பிக்கும் போது உறங்க ஆரம்பத்த ரசிகர்கள் படம் முடியும் வரை எழவில்லையாம். என்னையா சொல்றீங்க இந்தியா முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம் என்றும் , இரண்டு ஆண்டுகள் காத்திருந்து வந்த படம் என்றும் கொடுத்த பில்டப்புக்கு கொஞ்சம் கூடவா படம் வொர்த் இல்லை என்று சந்தேகம் எழுந்தது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் கண்ணீர் கலந்த வார்த்தைகளோடு கூறும் போது தான் நமக்குத் தெரிய வருகிறது. உள்ளே நடந்தது மிக பெரிய சம்பவம் என்று. சரி அப்படி H.வினோத் என்னதான் படத்தில் எடுத்து வைத்திருக்கிறார் என்று கேட்கும் போது, இது வினோத் படமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என்று ரசிகர்கள் குமுறுகின்றனர்.

இதற்கு முன்னால் படப்பிடிப்பின் போது, இந்த படத்தின் கதையை அஜித்குமார் பலமுறை வினோத்திடம் இந்த இடத்தில் இப்படி செய்யலாமே அந்த இடத்தில் அப்படி செய்யலாமே என்று பல அறிவுரைகள் வழங்கி இருக்கிறாரார். இறுதியாக எப்பா சாமி படம் எடுத்தால் போதும் என்ற மனநிலையில் தான் வினோத் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தான் படம் இந்த லட்சணத்தில் வந்திருக்கிறது. சரி அவரது ரசிகர்களையாவது இந்த படம் சந்தோஷப்படுத்தியதா என்று கேட்டால் ,அஜித் ரசிகர்களே கதறி அழும் அளவிற்கு படம் இருப்பதாக கூறுகின்றனர்.

சமூக வலைதளத்திலும் கூட இந்த வலிமை திரைப்படத்தினை வறுத்தெடுத்து வருகின்றனர். சினிமா ரசிகர்கள் வினோத்தின் சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களைப் பார்க்கும்போது இந்த வலிமை படத்தினை மிக நேர்த்தியாக சூப்பராக அமைத்திருப்பார் என்று எதிர்பார்த்திருந்த போது ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். இது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் சமூகவலைதளத்தில் இந்தப் படம் விவேகம் படத்தின் அடுத்த பாகமான விவேகம் 2 என்றும் கலாய்த்து வருகின்றனர்.

valimai-review
valimai-review

சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படம் வெளியானபோது, சிறுத்தை சிவாவை திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள், என்னைய்யா படம் எடுத்து வச்சிருக்க என்று கேள்விகளால் துளைத்தனர். ஆனால் இந்த வலிமை படத்தை பார்த்த பிறகு சிறுத்தை சிவா எவ்வளவோ பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு மிக தரமான செய்கையை அஜித்திற்காக செய்திருக்கின்றார் H.வினோத். இந்தப் படத்தை பார்த்துதான் அஜித் H. வினோத் வீட்டிற்கே சென்று பாராட்டினார் என்று கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக உள்ளது. வலிமையை எந்த அளவுக்கு எதிர்பார்த்தார்களோ அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் வலிமை படத்தை வச்சு செய்து வருகின்றனர்.

Trending News