ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மூன்றே வாரத்தில் வலிமை இழந்த வினோத்.. அஜித்துக்குகே இந்த நிலைமையா.!

சமீபத்தில் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வலிமை படம் வெளியாகிறது என்பதால் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர்.

வலிமை படம் அஜித்தின் தீவிர ரசிகர்கள் தவிர பொதுவான ரசிகர்களை படம் கவரவில்லை. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வார இறுதியில் திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ்புல்லாக உள்ளது. அதனால் இப்படம் வரவேற்பு இல்லை என்றாலும் வசூல் பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனால் தற்போது வரை திரையரங்குகளில் வலிமை படம் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வலிமை படத்தை ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வலிமை படத்தை போனி கபூர் உடன் ஜீ தமிழ் இணைந்து தான் படத்தை தயாரித்து இருந்தது.

இந்நிலையில் வலிமை படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் ஓடிடி உரிமையை ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளது. அதனால் தற்போது இப்படத்தை வருகிற 20ம் தேதி அன்று ஓடிடி வெளியீட்டை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அஜீத் ரசிகர்கள் வலிமை படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் ஒடிடியில் வெளியிடுகிறீர்கள் என்று ஆச்சரியத்தில் உள்ளன. ஏனென்றால் திரையரங்குகளில் வலிமை படத்திற்கான வரவேற்பு கிடைக்காததால் ஓடிடியில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் தற்போது ஓடிடி வெளியாவதை வைத்தே படத்தின் வரவேற்ப்பை கணித்து விடலாம் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.

Trending News