புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வலிமை வில்லனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. எல்லாம் அஜித் சொல்லிக் கொடுத்த மந்திரம் தான்

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் கார்த்திகேயா தமிழில் வலிமை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் ஏற்கனவே தமிழில் ஓவியா நடித்த 90 எம் எல் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் வலிமை படம்தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் இவர் அஜித்துக்கு வில்லனாக வலிமை திரைப்படத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். இதையடுத்து அவருக்கு தமிழில் ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் இன்னும் எந்த திரைப்படத்திலும் நடிக்க முடிவு செய்யவில்லை.

இந்நிலையில் கார்த்திகேயா அடுத்ததாக ஹீரோவாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை நேகா ஷெட்டி நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார். நாக வம்சி இப்படத்தை தயாரிக்க மணிஷர்மா இசையமைக்கிறார். பக்கா என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்படம் காதல் மற்றும் ரொமான்ஸ் கலந்து ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர். அதனால் இப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ActorKartikeyan
ActorKartikeyan

தற்போது கார்த்திகேயா மற்றும் படக்குழுவினர் அனைவரும் பூஜையில் கலந்துகொண்ட போட்டோக்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஜித்குமார் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மதித்து வாழ்க்கையில் அடுத்த கட்டம் எப்படி எடுத்து வைப்பது என்பதற்கு உதவியும் செய்வார்கள்.

அப்படித்தான் அருண்விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டார் என்றே கூறலாம். வலிமை பட வில்லன் கார்த்திகேயாவின் சினிமா வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News