வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

துணிவு படத்துக்கு பயந்து வம்சி செய்த காரியம்.. எல்லாம் வீண் செலவு என்று புலமும் தயாரிப்பாளர்

விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு போட்டி போட உள்ளது. இந்நிலையில் இப்போதே இந்த இரு படத்தை பற்றிய செய்தி தான் இணையத்தில் தினமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது துணிவு படத்திற்கு தான் ஓரளவு ஹைப் அதிகமாக உள்ளது.

அதாவது துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்போதுமே சண்டை காட்சிகள் என்றால் அது விஜய் படம் தான். ஆனால் வாரிசு படமோ குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

Also Read : வாரிசு மட்டுமல்ல தளபதி 67 உடன் போட்டி போடவும் நாங்கள் ரெடி.. சுத்தி அடிக்கும் துணிவு படக்குழு

மேலும் துணிவு படத்தில் பயங்கரமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்த வாரிசு இயக்குனர் வம்சி வீம்புக்கு என்றே பிரம்மாண்டமாக சண்டைக் காட்சிகள் எடுக்க உள்ளாராம். இதற்காக 100 லாரி, 50 கிரேன் இன்னும் எக்கச்சக்க வாகனங்கள் வைத்து பிரம்மாண்டம் என்ற பெயரில் தெலுங்கு வாடையில் சண்டை காட்சிகளை எடுத்து வருகிறாராம்.

ஆனால் இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு கவரும் என்பது சந்தேகம்தான். ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் தளபதி விஜய் தேவையில்லாமல் தலையை கொடுத்து மாட்டிக்கொண்டோமே என்று புலம்பி வருகிறாராம். மேலும் படத்துக்கும் இந்த சண்டைக் காட்சிகள் சம்பந்தம் இருக்குமா என்பதே தெரியவில்லையாம்.

Also Read : இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

இவ்வாறு தேவையில்லாமல் சண்டைக் காட்சி எடுக்கப்படுவது தண்ட செலவு தான் என வாரிசு தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம். அதுமட்டுமின்றி இப்போது இது தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்ற பேச்சும் இருந்து வருகிறது.

ஏற்கனவே விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தான் ஆக்சனை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடிக்கலாம் என்று வாரிசு படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட சிக்கலை சந்தித்து வருகிறார்.

Also Read : விஜய்யை அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்ளும் நடிகை.. தளபதி-67 வாய்ப்புக்காக செய்த வேலை

Trending News