புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு இருக்கு எங்களுக்கு இல்லையா.? சைக்கோ பாலாவிடம் சிக்கிய வணங்கான் நடிகை

Director Bala: சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஆனால் இடையில் ஏற்பட்ட வாய்க்கா தகராறு காரணமாக அருண் விஜய் இந்த ப்ராஜெக்ட்டுக்குள் வந்தார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி மிரட்டி இருந்தது.

இந்நிலையில் பாலா தன்னை அடித்ததாக இளம் நடிகை ஒருவர் கூறி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் சூர்யா நடித்த போது அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். அதே போல் இரண்டாவது ஹீரோயின் ஆக மமிதா பைஜூ கமிட்டாகி நடித்து வந்தார்.

ஏகப்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமலு படத்திலும் கலக்கி இருந்தார். அதன் தாறுமாறான வெற்றியால் குஷியாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தான் பாலாவின் சுயரூபத்தை இவர் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

Also read: 7 கோடி நஷ்டத்திற்கு வந்த விடிவுகாலம்.. சைக்கோ இயக்குனருக்கு அப்பாவை தூது அனுப்பிய சூர்யா

அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என பாலா விளக்கமாக கூறியிருக்கிறார். அதை அடுத்து மமிதாவும் அதே போல் நடித்தும் காட்டி இருக்கிறார். ஆனால் சரியாக வராத காரணத்தால் மூன்று முறைக்கு மேல் டேக் போயிருக்கிறது.

இதனால் கடுப்பான பாலா அவரை அனைவர் முன்னிலையிலும் அடித்திருக்கிறார். அதைப்பற்றி கூறியிருக்கும் மமிதா நல்லவேளை நான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இப்படித்தான் சூர்யாவையும் அவர் படாத பாடுபடுத்தினார்.

அதனாலேயே பாலா ஒரு சைக்கோ இயக்குனர் என்ற பேச்சு திரை உலகில் இருக்கிறது. இவர் படத்தில் நடித்தால் நிச்சயம் அடிவாங்கியே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. ஆனால் பெண்களை இப்படி அடித்து துன்புறுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

ஒரு விதத்தில் சூர்யா வெளியேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். விலங்குகளுக்கு கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியும் இப்போது முளைத்துள்ளது.

Also read: நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக கொண்டாடப்படும் 5 வில்லன்கள்.. தெய்வமாக கை கொடுத்த அருந்ததி பசுபதி

Trending News